May 2, 2024

பல வருட கனவு நிறைவேறிவிட்டது ..!! புது வீட்டில் பால் காய்ச்சிய நடிகை காஜல் அகர்வால் ..!! இணையத்தை கலக்கும் புகைப்படங்கள் ..!!

காஜல் அகர்வால் ஒரு பிரபலமான தென்னிந்திய திரைப்பட நடிகை ஆவார். ஆரம்பத்தில் சிறு சிறு கதாபாத்திரங்களில் நடித்து வந்த காஜல் அகர்வால் கடந்த 2008 ஆம் ஆண்டு பரத் நடிப்பில் வெளியான பழனி என்ற படத்தில் மனம் தமிழ் சினிமாவிற்கு கதாநாயகியாக அறிமுகமானார்.  பின்னர் இந்த படத்தை தொடர்ந்து பொம்மலாட்டம், நான் மகான் அல்ல, துப்பாக்கி, மாற்றான் ,ஆல் இன் ஆல் அழகுராஜா ,

ஜில்லா ,மாரி , பாயும் புலி , கவலை வேண்டாம் போன்ற பல திரைப்படங்களில் நடித்திருந்தார் . மேலும் இவர் தமிழ் மொழி மட்டுமல்லாமல் தெலுங்கு மற்றும் ஹிந்தி மொழி படங்களிலும் தொடர்ந்து நடித்துக் கொண்டு வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.  இதை அடுத்து தற்போது,

இயக்குனர் ஷங்கர் இயக்கத்தில் கமல்ஹாசன் நடிப்பில் உருவாகி வரும் இந்தியன் 2 படத்தில் நடித்துக் கொண்டு வருகிறார்  நடிகை காஜல் அகர்வால்.  இதனிடையே கௌதம் என்பவரை திருமணம் செய்து கொண்ட காஜல் அகர்வாலுக்கு ஒரு மகன் இருக்கிறார்.

இப்படி இருக்கும் நிலையில் புது வீட்டில் பால் காய்ச்சியுள்ளார் நடிகை காஜல் அகர்வால் . அந்தப் புகைப்படங்களை தற்போது தன்னுடைய சமூக வலைத்தள பக்கத்தில் பதிவிட்டுள்ளார் நடிகை காஜல் அகர்வால் . இதோ அந்த புகைப்படங்களை நீங்களும் பாருங்க…

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *