May 11, 2024

சின்ன வயசுல சரியான வாலு ..!! வெளியானது கீர்த்தி சுரேஷின் சிறு வயது புகைப்படங்கள் ..!!

தற்போது தென்னிந்திய சினிமாவை கலக்கி வரும் இளம் நடிகைகளில் ஒருவர்தான் நடிகை கீர்த்தி சுரேஷ்.  இவர் வேறு யாரும் இல்லை நடிகை மேனகாவின் இளைய மகள் தான் . அதுமட்டுமில்லாமல் கீர்த்தி சுரேஷின் அப்பாவும் ஒரு நடிகர் தானாம்.  ஆரம்பத்தில் குழந்தை நட்சத்திரமாக நடித்து வந்த கீர்த்தி சுரேஷ் கடந்த 2015 ஆம் ஆண்டு வெளியான இது என்ன மாயம் என்ற படத்தின் மூலம் தமிழ் சினிமாவிற்கு,

கதாநாயகியாக அறிமுகமானார் . பின்னர் இந்த படத்தை தொடர்ந்து ரஜினி முருகன் , தொடரி ,ரெமோ, பைரவா ,தானா சேர்ந்த கூட்டம், சர்கார் போன்ற பல திரைப்படங்களில் நடித்து தனக்கென ஒரு தனி இடத்தை பிடித்துக் கொண்டார் . மேலும் நடிகை கீர்த்தி சுரேஷ் ,

தமிழ் மொழி மட்டுமல்லாமல் தெலுங்கு மற்றும் மலையாள மொழி படங்களிலும் தொடர்ந்து நடித்துக் கொண்டு வருகிறார் . அதோடு சிறந்த நடிகைக்கான  தேசிய விருதையும் வென்று  இருக்கிறார் நடிகை கீர்த்தி சுரேஷ்.  தற்போது இவர் சைரன், ரகு தாத்தா ,ரிவால்வர் ரீட்டா ,

கன்னிவெடி என்று நாலு திரைப்படங்களுக்கு மேல் கைவசம் வைத்திருக்கிறார் . இப்படி இருக்கும் நிலையில் சிறுவயதில் செம வாலுத்தனம் பண்ணுவாராம் நடிகை கீர்த்தி சுரேஷ்.  அந்தப் புகைப்படங்கள் தற்போது சமூக வலைத்தளங்களில் வெளியாகி உள்ளது…

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *