April 29, 2024

முதலில் கார் அப்பறம் தான் கல்யாணம் ..!! புதிய காரை வாங்கிய அமீர்- பவானி ஜோடி ..!! வைரலாகும் புகைப்படங்கள் ..!!

பொதுவாகவே ஒவ்வொரு பிக் பாஸ் சீசனிலும் ஒவ்வொரு காதல் ஜோடி மலர்வார்கள் . அப்படி கடந்த பிக் பாஸ் சீசன் 7 போட்டியாளர்களாக கலந்து கொண்டு பின்னர் காதலர்களாக மாறியவர்கள் தான் அமீர் மற்றும் பாவனி . இதில் பாவனி  தமிழில் ஒளிப்பரப்பான ரெட்டைவால் குருவி, பாசமலர், சின்னத்தம்பி, ராசாத்தி போன்ற பல சீரியல்களில் நடித்திருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது .

மேலும் அமீரும்  ஓர் நடன கலைஞர் ஆவார் . பிக் பாஸ் வீட்டில் இவர்கள் இருவருக்கும் இடையே காதல் மலர்ந்தது . இதன் பிறகு வெளியே வந்ததிலிருந்து இப்போது வரை இருவரும் காதலித்து வருகின்றனர் . விரைவில்  இருவரும் திருமணம் செய்து கொள்ளப் போகிறார்கள்,

என்றும் தகவல் வெளியாகி உள்ளது . தற்போது இவர்கள் இருவரும் இணைந்து ஒரு படத்திலும் நடித்துக் கொண்டு வருகின்றனர் . அதோடு அஜித் நடிப்பில் வெளியான துணிவு படத்திலும் இருவரும் நடித்திருந்தார்கள் . இப்படி இருக்கும் நிலையில் தற்போது அமீரும் , பாவனியும் இணைந்து,

புதிய கார் ஒன்றை வாங்கியுள்ளனர் . அந்தக் காரின் விலை 15 லட்சமாம் . தற்போது அமீரும் , பாவனியும் அந்த காரின் முன்பு எடுத்த புகைப்படங்களை தன்னுடைய சமூக வலைத்தளங்களில் பகிர்ந்துள்ளனர் . இதோ அந்த புகைப்படங்களை நீங்களும் பாருங்க…

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *