May 9, 2024

இந்த குட்டி பாப்பா கொட்டாச்சியின் மகளா ..?? வெளியான குடும்ப புகைப்படங்கள் உள்ளே ..!!

தமிழ் படங்களில் காமெடி நடிகர்களுடன் நடித்து பிரபலமானவர்கள் ஏராளம் உண்டு . அந்த வகையில் பல பேரை கூறலாம் . அந்த வரிசையில் ஒருவர் தான் நடிகர் கொட்டாச்சி . ஆரம்பத்தில் இருந்தே  சிறு சிறு கதாபாத்திரங்களில் நடித்து வரும் கொட்டாச்சி பல வருடமாக தமிழ் சினிமாவில் இருந்து வருகிறார் . குறிப்பாக நடிகர் விவேக் உடன் இணைந்து பல திரைப்படங்களில்,

நடித்திருக்கிறார் நடிகர் கொட்டாச்சி. மேலும் இவர் நடிகர் மட்டுமல்லாமல் ஒரு சில குறும்படங்களையும் இயக்கி இருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது .  இப்படி சிறுசிறு படங்களில் நடித்த கவனம் ஈர்த்த கொட்டாச்சி அஞ்சலி என்பவரை திருமணம் செய்து கொண்டார்.

திருமணமான இவர்களுக்கு மானஸ்வி என்ற மகளும் இருக்கிறார்.  இவர் நயன்தாரா நடிப்பில் வெளியான இமைக்கா நொடிகள் என்ற படத்தின் மூலம் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமானார் . பின்னர் இந்த படத்தை தொடர்ந்து சுட்டு பிடிக்க உத்தரவு ,இருட்டு ,தர்பார், மாமனிதன்,

சந்திரமுகி 2 போன்ற பல  திரைப்படங்களில் நடித்திருந்தார் மானஸ்வி . இப்படி இருக்கும் நிலையில் பலரும் பார்த்திராத நடிகர் கொட்டாச்சியின் குடும்ப புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களில் வெளியாகி வைரலாகி வருகிறது…

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *