May 3, 2024

விஜய்யின் கைக்கு என்ன ஆச்சு ..!! கோட் படப்பிடிப்பில் இருந்து வந்த அதிர்ச்சி புகைப்படம் ..!!

தற்போது நடிகர் விஜய் லியோ படத்தை தொடர்ந்து இயக்குனர் வெங்கட் பிரபு இயக்கத்தில் உருவாகி வரும் தி கிரேட்டஸ்ட் ஆஃப் ஆல் டைம் என்ற படத்தில் பிஸியாக நடித்துக்கொண்டு வருகிறார் . இந்த படத்தில் அப்பா மகன் என்று இரட்டை வேடங்களில் விஜய் நடிப்பதாக கூறப்படுகிறது . அதோடு இந்த படத்தில் விஜய்யுடன் இணைந்து பிரசாந்த் ,பிரபுதேவா, சினேகா ,லைலா ,மீனாட்சி, பார்வதி ,மைக் மோகன் ,

ஜெயராம் ,அஜ்மல் ,யோகி பாபு ,விடிவி கணேஷ் , கஞ்சா கருப்பு போன்ற பல பிரபலங்கள் நடித்து வருகிறார்கள் . ஏஜிஎஸ் நிறுவனம் தயாரிக்கும் இந்த படத்திற்கு யுவன் சங்கர் ராஜா இசையமைக்க உள்ளார் . மேலும் பிரம்மாண்டமாக உருவாகி வரும் இந்த திரைப்படம்

தீபாவளி பண்டிகைக்கு வெளியாகலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது . இப்படி இருக்கும் நிலையில் இந்த படத்தில் இருந்து இடம் பெற்ற ஒரு புகைப்படம் வெளியாகி ரசிகர்களை அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளது. அந்த வகையில் இந்த படத்தில் ராணுவ வீரராக நடித்து வரும் ,

விஜய்க்கு போரில் தன்னுடைய வலது கையில் இரண்டு விரல்களை இழந்து விடுவாராம். அந்தப் புகைப்படம் தற்போது இணையத்தில் வெளியாகியுள்ளது . இதை பார்த்த ரசிகர்கள் அப்படியே உண்மையான கை போலவே இருக்கிறது என்று கூறி வருகின்றனர்…

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *