May 1, 2024

நடிகை ராதாவின் மகளுக்கு விரைவில் டும் டும் டும் ..!! நிச்சயதார்த்த புகைப்படங்களை வெளியிட்ட நடிகை ..!! வாழ்த்து மழையில் ரசிகர்கள் ..!!

80, 90களில் தமிழ் சினிமாவை கலக்கி வந்த முன்னணி நடிகைகளில் ஒருவர்தான் நடிகை ராதா . ஒரு தவிர்க்க முடியாத நடிகையாக வலம் வந்த ராதாவுக்கு திருமணமாகி இரண்டு மகள்கள்,  ஒரு மகன் உள்ளனர்.  இதில் மூத்த மகள் தான் நடிகை கார்த்திகா நாயர்.  கடந்த 2011 ஆம் ஆண்டு ஜீவா நடிப்பில் வெளியான கோ என்ற படத்தின் மூலம் தமிழ் சினிமாவிற்கு கதாநாயகியாக அறிமுகமானார் நடிகை கார்த்திகா.

இப்படி வெளியான முதல் திரைப்படமே இவருக்கு நல்ல வரவேற்பை பெற்று தந்தது என்று தான் சொல்ல வேண்டும்.  பின்னர் இந்த படத்தை தொடர்ந்து அன்னக்கொடி , புறம்போக்கு என்கிற பொதுவுடமை போன்ற தமிழ் படங்களில் நடித்திருந்தார் நடிகை கார்த்திகா . மேலும் கார்த்திகா,

தமிழ் மொழி மட்டுமல்லாமல் தெலுங்கு,  மலையாளம் மற்றும் கன்னட மொழி படங்களிலும் நடித்திருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது . ஆனால் இவரிடம் திறமை இருந்தும் கூட இவருக்கு யாரும் பட வாய்ப்பு கொடுக்கவில்லை.  இதனால் கிட்டத்தட்ட எட்டு வருடமாக எந்த ஒரு படங்களிலும்,

நடிக்காமல் இருந்து வந்தார் கார்த்திகா . இப்படி இருக்கும் நிலையில் சமீபத்தில் கார்த்திகாவுக்கு நிச்சயதார்த்தம் நடந்திருக்கிறது . அந்த புகைப்படத்தை இணையத்தில் பகிர்ந்துள்ளார் நடிகை ராதா . இதோ அந்த  புகைப்படங்களை நீங்களும் பாருங்க…

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *