May 6, 2024

லியோ படத்தில் திரிஷாவுக்கு குரல் கொடுத்தது நான் தான் ..!! சீக்ரெட்டை உடைத்த பிரபலம் ..!! இவரா என்று ஆச்சிரியமான ரசிகர்கள் ..!!

தற்போது தமிழ் சினிமா உலகில் பிரபல முன்னணி நடிகையாக வலம் வருபவர் நடிகை திரிஷா . இதுவரை பல முன்னணி நடிகர்களுடன் இணைந்து நடித்துள்ள திரிஷா விஜய்யுடன் இணைந்து கில்லி ,திருப்பாச்சி ,ஆதி , குருவி போன்ற திரைப்படங்களில் ஒன்றாக நடித்திருந்தார்.  குறிப்பாக இந்த படங்களில் எல்லாம் இவர்களுடைய கெமிஸ்ட்ரி நன்றாக ஒர்க் அவுட் ஆகி இருந்தது.

இதை அடுத்து ஐந்தாவது முறையாக லியோ படத்தில் ஜோடி சேர்ந்துள்ளனர் விஜய் மற்றும் திரிஷா . இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் பிரம்மாண்டமாக உருவான இந்த படத்தில் விஜய் , திரிஷா , சஞ்சய் தத் , அர்ஜுன் , கெளதம் வாசுதேவ் மேனன் , சாண்டி மாஸ்டர் போன்ற பல ,

பிரபலங்கள் நடித்துள்ளனர் .  இந்த திரைப்படம் இந்த மாதம் வெளியாக உள்ளதாக கூறப்படுகிறது . மேலும் நேற்று இந்த படத்தின் டிரைலர் வெளியாகி ரசிகர்களை வெகுவாக கவர்ந்து வருகிறது . அப்படி இந்த படத்தில் திரிஷாவுக்கு குரல் கொடுத்தது நான் தான் என்று பிரபலம் ஒருவர்,

பதிவு ஒன்றை போட்டு இருக்கிறார் . அவர் வேறு யாருமில்லை பிரபல பின்னணி பாடகியான சின்மயி தான் . இதுவரை பல சூப்பர் ஹிட் பாடல்களை பாடி இருக்கும் சின்மயி ஒரு சில நடிகைகளுக்கு பின்னணி குரல் கொடுத்து இருக்கிறார்.  ஆனால் பல வருடங்களாக இதிலிருந்து,

ஒதுங்கி இருந்த சின்மயி தற்போது லியோ படத்தின் மூலம் கம்பேக் கொடுத்திருக்கிறார் . அதை ரசிகர்களுக்கு தெரியப்படுத்தும் வகையில், இயக்குனர் லோகேஷ் கனகராஜுக்கும் , தயாரிப்பாளருக்கும் நன்றி என்று பதிவு ஒன்றை போட்டு இருக்கிறார் பாடகி சின்மயி…

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *