April 26, 2024

எலும்பும் தோலுமாக மாறிய காமெடி நடிகர் ஜனகராஜ் ..!! ஒரு காலத்தில் எப்படி இருந்த மனுஷன் ..!! வெளியான புகைப்படத்தை பார்த்து ஷாக்கான ரசிகர்கள் ..!!

80 , 90 களில் ஓர் தவிர்க்க முடியாத காமெடி நடிகராக கலக்கி கொண்டு வந்தவர் தான் நடிகர் ஜனகராஜ் . கடந்த 1978 ஆம் ஆண்டு இயக்குனர் பாரதிராஜா இயக்கத்தில் வெளியான கிழக்கே போகும் ரயில் என்ற படத்தின் மூலம் நடிகராக அறிமுகமானார் . பின்னர் இந்தப் படத்தை தொடர்ந்து சிறுசிறு கதாபாத்திரங்களின் நடித்து வந்த ஜனகராஜ் ஒரு கட்டத்தில் தவிர்க்க முடியாத காமெடி நடிகராக,

வலம் வந்தார் . அதுவும் இவர் காமெடி நடிகராக கலக்கிய நிழல்கள், சிந்து பைரவி, பாலைவன ரோஜாக்கள் ,முதல் வசந்தம் , அக்னி நட்சத்திரம், ராஜாதி ராஜா ,அபூர்வ சகோதரர்கள் போன்ற பல திரைப்படங்கள் சூப்பர் ஹிட் அடித்தது . இப்படி தவிர்க்க முடியாத காமெடி நடிகராக ,

கலக்கிக் கொண்டு வந்த ஜனகராஜ் ஒரு சில படங்களில் குணச்சித்திர வேடங்களிலும் நடித்து  அசத்தியிருந்தார் .  குறிப்பாக ரஜினி கமலுடன் இணைந்து பல திரைப்படங்களில் நடித்திருக்கிறார் நடிகர் ஜனகராஜ் . பின்னர் ஒரு கட்டத்தில் சினிமாவை விட்டு விலகி இருந்த ஜனகராஜ்,

நீண்ட இடைவேளைக்குப் பிறகு 96 என்ற படத்தின் மூலம் ரீ என்ட்ரி கொடுத்திருந்தார்.  பின்னர் இந்த படத்திற்கு பிறகு எந்த படங்களிலும் நடிக்காமல் இருந்து வந்த நடிகர் ஜனகராஜின் லேட்டஸ்ட் புகைப்படம் இணையத்தில் வெளியாகிய ரசிகர்களை அதிர்ச்சிக்குள்ளாக்கி உள்ளது.

அந்த வகையில் எலும்பும் தோலுமாக மாறி இருக்கிறார் நடிகர் ஜனகராஜ்.  இதை பார்த்த ரசிகர்கள் காமெடி நடிகர் ஜனகராஜா  இது.? ஆளே அடையாளம் தெரியலையே என்று கூறி வருகின்றனர்…

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *