April 29, 2024

உயிராகவும் உலகாகவும் இருக்கும் மகன்களின் புகைப்படத்தை வெளியிட்ட விக்கி- நயன் ஜோடி ..!!

விக்னேஷ் சிவன் ஓர் பிரபலமான தமிழ் திரைப்பட இயக்குனர் ,நடிகர் ,தயாரிப்பாளர் மற்றும் பாடலாசிரியர் ஆவார் . சிம்பு நடிப்பில் வெளியான போடா போடி என்ற படத்தின் மூலம் இயக்குனர் அவதாரம் எடுத்த விக்னேஷ் சிவன் ரசிகர்களிடையே  பிரபலமானது நானும் ரௌடி தான் படத்தின் மூலம் தான்.  இந்தப் படத்தின் படப்பிடிப்பின் போது தான் நயன்தாராவுக்கும், இவருக்கும் காதல் ஏற்பட்டது .

பின்னர் இந்த படத்தை தொடர்ந்து தானா சேர்ந்த கூட்டம் ,பாவ கதைகள் ,காத்து வாக்குல ரெண்டு காதல் போன்ற படங்களை இயக்கியிருந்தார் விக்னேஷ் சிவன்.  அது மட்டுமல்லாமல் தன்னுடைய மனைவியான நயன்தாராவுடன் இணைந்து ஒரு சில படங்களையும் தயாரித்தும்,

வருகிறார் இயக்குனர் விக்னேஷ் சிவன்.  இதனிடையே கடந்த வருடம் நயன்தாராவை கரம் பிடித்தார் இயக்குனர் விக்னேஷ் சிவன் . மேலும்  திருமணமாகி சில மாதங்களிலேயே வாடகை தாய் மூலம் இரட்டை ஆண் குழந்தைகளை பெற்றுக் கொண்டார்கள் விக்கி -நயன் ஜோடி .

குழந்தை பிறந்து பல மாதங்கள் ஆகியும் வெளியில் காட்டாமல் இருந்து வந்த விக்னேஷ் சிவன் தற்போது தன்னுடைய மகன்களான உயிர் , உலகின் புகைப்படங்களை வெளியிட்டுள்ளார் . இதோ அந்த புகைப்படங்களை நீங்களும் பாருங்க…

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *