April 28, 2024

இரண்டாம் திருமணத்தை முடித்த “பகல் நிலவு” சீரியல் நடிகர் ..!! வைரலாகும் புகைப்படங்கள் உள்ளே ..!!

விக்னேஷ் கார்த்திக் ஒரு பிரபலமான தமிழ் திரைப்பட நடிகர் மற்றும் இயக்குனர் ஆவார் . ஆரம்பத்தில் குறும்படங்களை இயக்கி பிரபலமான விக்னேஷ் கார்த்திக் விஜய் தொலைக்காட்சியில் ஒளிப்பரப்பான பல நிகழ்ச்சிகளில் போட்டியாளராக கலந்து கொண்டார் . பின்னர் விஜய் தொலைக்காட்சியில் ஒளிப்பரப்பான பகல் நிலவு என்ற சீரியலில் கார்த்திக் என்ற முக்கிய கதாபாத்திரத்தில்,

நடித்து ரசிகர்களிடையே பெரிய அளவில் பிரபலமானார் நடிகர் விக்னேஷ் கார்த்திக்.  இதன் பிறகு ஒரு சில படங்களில் நடித்திருந்த விக்னேஷ் கார்த்திக் கடந்த 2018 ஆம் ஆண்டு வெளியான ஏண்டா தலையில எண்ண வைக்கல என்ற படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமானார்.

இதைத்தொடர்ந்து திட்டம் இரண்டு ,அடியே போன்ற படங்களையும் இயக்கி இருந்தார் விக்னேஷ் கார்த்திக் . இதனிடையே கடந்த 2016ஆம் ஆண்டு ஷிவானி என்பவரை திருமணம் செய்து கொண்டார் நடிகர் விக்னேஷ் கார்த்திக் . இப்படி இருக்கும் நிலையில் நேற்று சத்தமில்லாமல் ,

இரண்டாம் திருமணத்தை முடித்திருக்கிறார் விக்னேஷ் கார்த்திக்.  தற்போது அவருடைய திருமண புகைப்படங்கள் இணையத்தில் வெளியாகி உள்ளது.  இதை பார்த்த ரசிகர்கள் பகல் நிலவு சீரியல் நடிகர் முதல் மனைவியை பிரிந்து விட்டாரா என்று கேள்வி எழுப்பி வருகின்றனர்…

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *