April 25, 2024

அஜித்தின் “பைக் லைசன்ஸை” கேன்சல் செய்யுங்க..!! உங்களுக்கு புண்ணியமா போகும் ..!! பிரபலம் வைத்த வேண்டுகோள் ..!!

தற்போது தமிழ் சினிமாவை கலக்கி வரும் நடிகர்களில் ஒருவர் தான் நடிகர் அஜித் . கடைசியாக அஜித் நடிப்பில் வெளியான துணிவு திரைப்படம் சூப்பர் ஹிட் படமாக அமைந்தது.  இதைத்தொடர்ந்து இயக்குனர் மகிழ் திருமேனி இயக்க உள்ள விடாமுயற்சி படத்தில் கமிட்டானார் நடிகர் அஜித் . லைக்கா நிறுவனம் தயாரிக்கும் இந்த படத்திற்கு அனிருத் இசையமைக்க உள்ளார் . ஆனால் இந்த படத்தின்,

அறிவிப்பு வெளியாகி பல மாதங்கள் ஆகியும் படப்பிடிப்பு இன்னும் தொடங்கவில்லை . இந்நிலையில் இந்த படத்தின் படப்பிடிப்பு சமீபத்தில் தொடங்கியதாக தகவல் வெளியானது . இப்படி இருக்கும் நிலையில் அஜித்தின் லைசன்ஸை கேன்சல் செய்யுங்க என்று கூறியிருக்கிறார்,

பிரபலம் ஒருவர். அவர் வேறுயாருமில்லை எல்லா நடிகர்களையும் வம்புக்கு இழுக்கும் ப்ளூ சட்டை மாறன் தான் .  அந்த வகையில் சமீபத்தில் டிடிஎஃப் வாசனின்  லைசன்ஸை கேன்சல் செய்தார் ஆர்டிஓ . அதேபோல விடாமுயற்சி படப்பிடிப்பு முடியும்வரை அஜித்தின் லைசன்ஸையும் ,

கேன்சல் பண்ணுங்க உங்களுக்கு புண்ணியமா போகும் என்று நக்கல் பதிவு ஒன்றை தன்னுடைய சமூக வலைத்தளப்பக்கத்தில்  பதிவிட்டுள்ளார் ப்ளூ சட்டை மாறன்.  இதற்கு காரணம் நடிகர் அஜித் விடாமுயற்சி படத்தில் கமிட்டாகாமல் ஊர் ஊராக பைக் டூர்  சென்று வந்தார் .

இதனால் ப்ளூ சட்டை மாறன் இப்படி ஒரு பதிவை போட்டு அஜித் ரசிகர்களை வம்புக்கு  இழுத்திருக்கிறார் . தற்போது அவர் போட்ட பதிவு இணையத்தை கலக்கிக்கொண்டு வருகிறது …

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *