April 30, 2024

73 வயதாகும் சூப்பர் ஸ்டாரை ..!! 30 வயது இளைஞனாக மாற்றப்போகும் லோகேஷ் ..!! புகைப்படத்தை பார்த்து குஷியான ரஜினி ரசிகர்கள் ..!!

தற்போது சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் அவர்கள் ஜெய் பீம் பட இயக்குனரான டிஜே ஞானவேல் இயக்கத்தில் உருவாகி வரும் வேட்டையன் என்ற படத்தில் பிஸியாக நடித்துக்கொண்டு வருகிறார்.  இந்த படத்தில் சூப்பர் ஸ்டாருடன் இணைந்து அமிதாப்பச்சன் , ராணா டகுபதி ,பகத் பாசில், ரித்திகா சிங், துஷாரா விஜயன் போன்ற பல பிரபலங்கள் நடித்து வருகின்றனர்.  மேலும் இந்த படத்தை முடித்த கையோடு ,

இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்க உள்ள புதிய படத்தில் நடிக்க இருக்கிறார் சூப்பர் ஸ்டார்  ரஜினிகாந்த் அவர்கள் . மேலும் விஜய் , கமல் போன்ற நடிகர்களுக்கு மிகப்பெரிய வெற்றி படத்தை கொடுத்த இயக்குனர் லோகேஷ் கனகராஜ் கண்டிப்பாக சூப்பர் ஸ்டாருக்கு ம்,

பிரம்மாண்ட வெற்றி படத்தை கொடுப்பார் என்று ரசிகர்கள் கூறி வருகின்றனர்.  மேலும் சூப்பர் ஸ்டாரின் படத்தை இயக்குவதற்கு இன்னும் நேரம் அதிகமாக இருப்பதால் அந்த கதையை கொஞ்சம் கொஞ்சமாக செதுக்கி வருகிறாராம் லோகேஷ் கனகராஜ்.  குறிப்பாக இந்த படத்தில் ,

இந்தியன் , கோட் போன்ற படங்களில் பயன்படுத்திய டி ஏஜிங் தொழில்நுட்பத்தை பயன்படுத்த உள்ளாராம் இயக்குனர் லோகேஷ் கனகராஜ்.  அப்படி இந்த படத்தில் தளபதி படத்தில் சூப்பர் ஸ்டார் எப்படி இருந்தாரோ , அதேபோல இந்த படத்தில் கொண்டுவர உள்ளாராம் லோகேஷ்.

மேலும் விரைவில் இந்த படம் குறித்த அப்டேட் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது . இருந்தாலும் இந்த ஒரு தகவலே ரஜினி ரசிகர்களுக்கு மிகப்பெரிய உற்சாகத்தை ஏற்படுத்தி உள்ளது…

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *