April 26, 2024

உங்க நல்ல மனசுக்கு நீங்க நூறு வருஷம் வாழனும்..!! வெள்ளத்தில் மிதக்கும் தென் மாவட்டதங்கள் ..!! களத்தில் இறங்கிய அறந்தாங்கி நிஷா ..!!

அறந்தாங்கி நிஷா ஓர் பிரபலமான விஜய் டிவி பிரபலம் ஆவார் . ஆரம்பத்தில் விஜய் தொலைக்காட்சியில் ஒளிப்பரப்பான கலக்கப்போவது யாரு என்ற நிகழ்ச்சியின் மூலம் பிரபலமான அறந்தாங்கி நிஷா தொடர்ந்து பல நிகழ்ச்சிகளில் பங்கு பெற்று ரசிகர்களிடையே தனக்கென ஒரு தனி இடத்தை பிடித்துக் கொண்டார் . மேலும் ஒரு பெண் காமெடி செய்வது அவ்வளவு சாதாரண விஷயம் கிடையாது .

ஆனால் அதை அசால்டாக செய்து காட்டினார் அறந்தாங்கி நிஷா.  மேலும் இவர் தமிழில் வெளியான மாரி 2 ,கோலமாவு கோகிலா ,கலகலப்பு 2, திருச்சிற்றம்பலம், அநீதி , ஜெயிலர் போன்ற பல திரைப்படங்களில் நடித்திருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில் சமீபத்தில் சென்னை வெள்ளத்தில் மிதந்த போது சென்னை மக்களுக்காக தன்னால் முடிந்த உதவிகளை செய்திருந்தார் அறந்தாங்கி நிஷா . இதை அடுத்து தற்போது தென்மாவட்டங்களில் வெள்ளப்பாதிப்பு  அதிகரித்துள்ளது.

இதனால் சென்னையைத் தொடர்ந்து தென் மாவட்டங்களுக்கும் உதவி செய்வதற்கு களமிறங்கியுள்ளார் அறந்தாங்கி நிஷா . தற்போது அந்த புகைப்படங்கள் இணையத்தில் வெளியாகியுள்ளது . இதை பார்த்த ரசிகர்கள் நீங்க எல்லாம் நூறு வருஷம் வாழனும் என்று கூறி வருகின்றனர்…

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *