April 28, 2024

சூப்பர் ஸ்டார்னா அது ரஜினி ..!! ” இந்த ” ஸ்டார்னா அது கார்த்தி ..!! 25 வது படத்தில் கார்த்திக்கு கிடைத்த புதிய பட்டம் ..!! என்னவென்று நீங்களே பாருங்க ..!!

மூத்த நடிகரான சிவகுமாரின் இளைய மகன் தான் கார்த்தி . ஆரம்பத்தில் இயக்குனர் மணிரத்னத்திடம் உதவி இயக்குனராக பணியாற்றி வந்த கார்த்தி கடந்த 2007 ஆம் ஆண்டு இயக்குனர் அமீர் இயக்கத்தில் வெளியான பருத்திவீரன் என்ற படத்தின் மூலம் கதாநாயகனாக அறிமுகமானார்.  இப்படி வெளியான முதல் திரைப்படமே இவருக்கு மிகப்பெரிய வரவேற்பை பெற்று தந்தது என்று தான் சொல்ல வேண்டும் .

பின்னர் இந்த படத்தைத் தொடர்ந்து ஆயிரத்தில் ஒருவன், பையா ,நான் மகான் அல்ல, சிறுத்தை ,மெட்ராஸ் ,கொம்பன் ,கடைக்குட்டி சிங்கம், கைதி , பொன்னியின் செல்வன்  போன்ற பல சூப்பர் ஹிட் படங்களில் நடித்து தனக்கென ஒரு தனி இடத்தை பிடித்துக் கொண்டார் நடிகர் கார்த்தி.

குறிப்பாக படத்திற்கு படம் வித்தியாசமான கதைக்களங்களை தேர்வு செய்து தமிழ் ரசிகர்களை வெகுவாக கவர்ந்திருந்தார் கார்த்தி.  இப்படி தவிர்க்க முடியாத நடிகராக கலக்கி கொண்டு வந்த கார்த்தியின் 25வது திரைப்படம் தான் ஜப்பான் மிகப்பெரிய எதிர்பார்ப்பில் உருவானது ,

ஆனால் இந்த திரைப்படம் மிகப்பெரிய தோல்வி படமாக அமைந்துள்ளது.  இருந்தாலும் இந்த படத்தின் மூலம் கார்த்திக்கு புதிய பட்டம் ஒன்று கிடைத்துள்ளது . அந்த வகையில் இந்தப் படத்தின் மூலம் கார்த்திக்கு ” கோல்டன் ஸ்டார் ” என்ற பட்டம் கிடைத்திருக்கிறது .

இதனால் அடுத்தடுத்த படங்களில் ” கோல்டன் ஸ்டார் கார்த்தி ” என்று போடப்படும் என்றும் தகவல் வெளியாகி உள்ளது . இதைப் பார்த்த ரசிகர்கள் சூப்பர் ஸ்டார் ரஜினி,  கோல்டன் ஸ்டார்னா கார்த்தியா என்று கூறி வருகின்றனர்…

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *