April 29, 2024

ஆசிரியராக நடித்து பட்டையை கிளப்பிய தமிழ் பிரபலங்கள் ..!! உங்களுக்கு யாரை பிடிக்கும் ..??

செப்டம்பர் 5ஆம் தேதி டாக்டர் ராதாகிருஷ்ணனின் பிறந்த நாளை ஆசிரியர் தினமாக கொண்டாடி வருகிறார்கள்.  இப்படி இருக்கும் நிலையில் தமிழ் சினிமாவை சேர்ந்த பல பிரபலங்கள் ஆசிரியராக நடித்து பட்டையை கிளப்பியுள்ளனர் . இதில் முதலாவதாக உள்ளவர் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் தர்மத்தின் தலைவன் படத்தில் ஞாபகம் மறதி அதிகம் உள்ள ஆசிரியராக நடித்திருப்பார் .இவரைத் தொடர்ந்து நம்மவர் படத்தில்,

நேர்மையான ஆசிரியராக நடித்து ரசிகர்களை கவர்ந்திருப்பார் கமல்.  இவரைத் தொடர்ந்து விஜயகாந்த் ரமணா படத்தில் ஆசிரியராக நடித்திருப்பார் . இவரைத் தொடர்ந்து சாட்டை படத்தில் சமுத்திரக்கனி ரசிகர்களின் ஃபேவரிட் ஆசிரியராக நடித்திருப்பார் . இப்போது வரை இவருடைய,

கதாபாத்திரம் பேசப்படுகிறது . இவர்கள் மட்டுமல்லாமல் வாகை சூடவா படத்தில் படிப்பறிவில்லாத மாணவர்களுக்கு கல்வி கொடுத்த விமல் , நண்பன் படத்தில் காமெடி ஆசிரியராக நடித்த சத்யராஜ் .இப்படி நடிகர்கள் மட்டுமில்லாமல் ராட்சசி படத்தில் தலைமையாசிரியராக நடித்த ஜோதிகா ,

ஹரிதாஸ் மற்றும் பள்ளிக்கூடம் போன்ற படங்களில் டீச்சராக நடித்திருந்த சினேகா ,கடைசியில் பிரேமம் படத்தில் ரசிகர்களின் பேவரைட் டீச்சராக நடித்திருந்தார் சாய்பல்லவி.இதுபோன்று பல பேரை கூறலாம் இதில் உங்களுக்கு யாரை பிடிக்கும்..??