April 25, 2024

ரஜினி செய்ததெல்லாம் ஒரு சாதனையா ..?? ஐந்தே நாளில் ஜெயிலரை பந்தாடிய ஜவான் ..!! அப்ப 1000 கோடி வசூல் கன்பார்ம் ..!! மாஸ் காட்டும் அட்லீ ..!!

கடந்த வாரம் இயக்குனர் அட்லீ  இயக்கத்தில் ஷாருக்கான் நடிப்பில் வெளியான திரைப்படம் தான் ஜவான்.  ஷாருக்கானின் மனைவி  தயாரிப்பில் உருவான இந்தப் படத்தில் ஷாருக்கானுடன் இணைந்து நயன்தாரா, விஜய் சேதுபதி ,தீபிகா படுகோன், பிரியாமணி ,சான்யா மல்கோத்ரா, யோகி பாபு போன்ற பல நடிகர் ,நடிகைகள் நடித்திருந்தனர் . இந்த  படத்திற்கு அனிருத் இசையமைத்திருந்தார் .

கிட்டத்தட்ட 300 கோடி பட்ஜெட்டில் உருவான இந்த திரைப்படம் வெளியாகி சூப்பர் ஹிட் படமாக அமைந்துள்ளது.  குறிப்பாக ஜவான் படத்தையும் காப்பி அடித்து எடுத்திருந்தாலும் கூட  ஹிந்தி சினிமாவிலும் அழிக்க  முடியாத கால் தடத்தை பதித்திருக்கிறார் இயக்குனர் அட்லீ .

அதோடு  இந்த திரைப்படம் வெறும் ஐந்து நாட்களிலேயே ஜெயிலர் படத்தின் வாழ்நாள் வசூலை முறியடித்து விட்டதாம். அந்த வகையில் கடந்த மாதம் இயக்குனர் நெல்சன் இயக்கத்தில்  சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் வெளியான திரைப்படம் தான்  ஜெயிலர் .

இந்த  திரைப்படம் மொத்தமாகவே 600 கோடிக்கு மேல்தான் வசூல் செய்திருந்தது . தற்போது இதெல்லாம் ஒரு சாதனையா என்று சொல்லி ஜெயிலரை முறியடித்து இருக்கிறது ஜவான் திரைப்படம் . அந்த வகையில் வெறும் 5 நாட்களிலேயே 600 கோடிக்கு மேல் வசூல் ,

செய்து சாதனை படைத்திருக்கிறது   ஜவான் திரைப்படம்.  இதனால் கண்டிப்பாக ஜவான்  திரைப்படம் ஆயிரம் கோடி வசூலை தொடும் என்று கணிக்கப்படுகிறது…

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *