May 6, 2024

சினிமா நிழலே படாமல் மகனை வளர்த்த மாதவன் ..!! பதக்கங்களை குவித்து பெருமை சேர்க்கும் மகன் ..!!

மாதவன் ஓர் பிரபலமான தமிழ் திரைப்பட நடிகர் ,இயக்குனர் மற்றும் தயாரிப்பாளர் ஆவார்.  கடந்த 2000-ம் ஆண்டு வெளியான அலைபாயுதே என்ற படத்தின் மூலம் ஹீரோவாக அறிமுகமானார் நடிகர் மாதவன் . இப்படி வெளியான முதல் படத்திலேயே ஒட்டுமொத்த ரசிகர்களையும் கவர்ந்து விட்டார் நடிகர் மாதவன்.  பின்னர் இந்த படத்தை தொடர்ந்து மின்னலே, டும் டும் டும் ,கன்னத்தில் முத்தமிட்டால்,

ரன், அன்பே சிவம், பிரியமான தோழி என்று தொடர்ச்சியாக பல சூப்பர் ஹிட் படங்களில் நடித்து தனக்கென ஒரு தனி இடத்தை பிடித்துக் கொண்டார்.   இப்படி நடிகராக கலக்கி கொண்டு வந்த மாதவன் கடந்த வருடம் வெளியான ராக்கெட்ரி என்ற படத்தின் மூலம்,

இயக்குனர் அவதாரமும் எடுத்தார் . இதனிடையே கடந்த 1999 ஆம் ஆண்டு சரிடா என்பவரை திருமணம் செய்து கொண்டார் . திருமணமான இவர்களுக்கு வேதாந்த் என்ற மகனும் இருக்கிறார் . ஆனால் நடிகர் மாதவன் மற்ற நடிகர்களைப் போல இல்லாமல் தன்னுடைய மகனை சினிமா,

நிழல் கூட படாமல் வளர்த்திருந்தார் . தற்போது அவருடைய மகன் பிரபலமான நீச்சல் வீரராக இருக்கிறாராம்.  அப்படி இதுவரை இந்தியாவிற்காக பல பதக்கங்களை குவித்து இருக்கிறாராம் . தற்போது அவருடைய புகைப்படங்கள் இணையத்தில் வெளியாகி உள்ளது…

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *