May 9, 2024

முதல் வாரத்திலேயே எலிமினேட்டான “பிக்பாஸ்” யுகேந்திரனின் குடும்ப புகைப்படங்கள் இதோ ..!!

சமீபத்தில் தொடங்கப்பட்ட பிக் பாஸ் சீசன் 7 ல் போட்டியாளராக கலந்து கொண்டவர் தான் யுகேந்திரன் . இவர் வேறு யாரும் இல்லை மறைந்த பிரபல பின்னணி பாடகரும்,  நடிகருமான மலேசியா வாசுதேவனின் மகன்தான் . கடந்த 2001 ஆம் ஆண்டு அஜித் நடிப்பில் வெளியான பூவெல்லாம் உன் வாசம் என்ற படத்தின் மூலம் நடிகராக அறிமுகமானார் நடிகர் யுகேந்திரன்.

பின்னர் இந்த படத்தை தொடர்ந்து யூத், பகவதி ,அன்பே அன்பே ,மதுர ,திருப்பாச்சி ,முதல் கனவே ,நெஞ்சத்தைக் கிள்ளாதே, ராஜாதி ராஜா போன்ற பல திரைப்படங்களில் நடித்திருந்தார் நடிகர் யுகேந்திரன். அது மட்டுமல்லாமல் இவர் பாண்டவர் பூமி, சாமி ,

ஆட்டோகிராப், லேசா லேசா , தேவதையை கண்டேன் போன்ற பல திரைப்படங்களில் இடம் பெற்ற பாடல்களையும் பாடியிருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது . இப்படி இருக்கும் நிலையில் பிக் பாஸ் நிகழ்ச்சியில் போட்டியாளராக கலந்து கொண்ட யுகேந்திரன் முதல் வாரத்திலேயே,

கம்மியான ஓட்டுக்கள் வாங்கி எலிமினேட்டாக உள்ளாராம் . இப்படி இருக்கும் நிலையில் பலரும் பார்த்திடாத யுகேந்திரனின் குடும்ப புகைப்படங்கள் இணையத்தை கலக்கி கொண்டு வருகிறது . இதோ அந்த புகைப்படங்களை  நீங்களும் பாருங்க…

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *