May 8, 2024

பெண்களின் பாதுகாப்பு தான் எனக்கு முக்கியம் ..!! பிரதீப்புக்கு ரெட் கார்டு கொடுத்து வெளியேற்றிய கமல் ..!! கொந்தளிக்கும் ரசிகர்கள் ..!! பிரதீப்புக்கு இவ்வளவு ஆதரவா ..??

சமீபத்தில் தொடங்கப்பட்ட பிக் பாஸ் சீசன் 7 ஆரம்பத்தில் இருந்து விறுவிறுப்பாக போய்க்கொண்டிருக்கிறது . மேலும் இந்த முறை 18 போட்டியாளர்கள் பிக் பாஸ் வீட்டிற்குள் வந்தனர்.  அப்படி இந்த நிகழ்ச்சி தொடங்கியதில் இருந்தே தன்னுடைய ஆட்டிட்யூடால் சகப் போட்டியாளர்களின் வெறுப்பை சம்பாதித்தவர் பிரதீப் ஆண்டனி . தமிழில் வெளியான அருவி , வாழ்,  டாடா போன்ற படங்களில்,

நடித்திருந்த பிரதீப் ஆண்டனி பிக் பாஸ் வீட்டிற்குள் நுழைந்ததிலிருந்தே பல சர்ச்சைகளை கிளப்பி இருந்தார் . இருந்தாலும் ரசிகர்கள் பிரதீப்புக்கு தொடர்ந்து ஆதரவை கொடுத்து வந்தனர் . இப்படி இருக்கும் நிலையில் நேற்றைய எபிசோடில் பிக் பாஸ் வீட்டில் இருந்த அனைத்து போட்டியாளர்களும் ,

பிரதீப்புக்கு எதிராக கொடி பிடித்தனர் . இன்னும் சொல்லப்போனால் பிரதீப் பெண்களிடம் அத்துமீறி நடந்து கொண்டதாகவும்,  அதனால் பிக் பாஸ் வீட்டில் பெண்களுக்கு பாதுகாப்பே இல்லை என்றும் கூறப்பட்டது . இந்த ஒரு காரணத்தினால் பிரதீப்புக்கு ரெட் கார்டு கொடுத்து வெளியே,

அனுப்பி வைத்துவிட்டார் கமல்ஹாசன்.  அது மட்டுமல்லாமல் பிரதீப் இந்த நிகழ்ச்சியை விட்டு வெளியேறவில்லை என்றால் தான் விலகிடலாம் என்றும் கமல் நினைத்தாராம் . இது ஒரு பக்கம் இருக்க , மறுப்பக்கம் கமலின் தீர்ப்பால் ரசிகர்கள் கொந்தளித்து வருகின்றனர்.  காரணம் பிக் பாஸ்,

வீட்டில் நிக்சன் ஐசு செய்யும் சில்மிஷன்கள் எல்லாம் இவர்களுடைய கண்ணுக்கு தெரியவில்லையா.? அதையெல்லாம் ஏன் தட்டிக் கேட்கவில்லை என்று கொந்தளித்து வருகின்றனர் . இதனால் தற்போது பிரதீப்புக்கு ஒரு சில பிரபலங்களும் ஆதரவை தெரிவித்து வருகின்றனர்…

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *