May 2, 2024

எனக்கும் சந்திரமுகி படத்திற்கும் எந்த சம்மந்தமும் கிடையாது ..!! திடீரென மாற்றி பேசும் ராகவா லாரன்ஸ் ..!! சரியான குழப்பத்தில் ரசிகர்கள் ..!!

தற்போது இயக்குனர் பி வாசு இயக்கத்தில் நடிகர் ராகவா லாரன்ஸ் நடிப்பில் விரைவில் வெளியாக உள்ள திரைப்படம் தான் சந்திரமுகி 2 . கடந்த 2005 ஆம் ஆண்டு வெளியான சந்திரமுகி படத்தின் இரண்டாம் பாகமான இந்த படத்தில் ராகவா லாரன்ஸ் உடன் இணைந்து கங்கனா ரனாவத் ,வடிவேலு ,ராதிகா ,லட்சுமிமேனன் ,மகிமா நம்பியார் ,சிருஷ்டி டாங்கே, ரவி மரியா, மனோபாலா போன்ற பல நடிகர் நடிகைகள் நடித்துள்ளனர்.

லைக்கா நிறுவனம் தயாரித்த இந்த படத்திற்கு ஆஸ்கர் வென்ற எம் எம் கீரவாணி இசையமைத்திருக்கிறார் . மேலும் இந்த படம் கடந்த செப்டம்பர் 15ஆம் தேதி வெளியாக இருந்த நிலையில் தற்போது கிராபிக்ஸ் பணிகள் முடியாததால் ரிலீஸ் தேதி தள்ளி வைக்கப்பட்டது .

இப்படி இருக்கும் நிலையில் சந்திரமுகி படத்திற்கும் இந்த படத்திற்கும் எந்த சம்பந்தமும் இல்லை என்று கூறியிருக்கிறார் நடிகர் ராகவா லாரன்ஸ்.  அந்த வகையில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் சாரை போல என்னால் நடிக்க முடியாது . இதனால் அந்தப் படத்தின் பெயரை மட்டும் தான்,

இந்த படத்தில் பயன்படுத்தி இருக்கிறோம் . மற்றபடி அந்தப் படத்திற்கும் இந்த படத்திற்கும் எந்த ஒரு சம்பந்தமும் கிடையாது என்று கூறியிருந்தார் நடிகர் ராகவா லாரன்ஸ்.  ஆனால் சந்திரமுகி படத்தின் இரண்டாம் பாகம் என்று தான் படப்பிடிப்பை தொடங்கினார்கள்.

அப்படி இருக்கும் போது  ராகவா லாரன்ஸ் மாற்றிப் பேசி உள்ளது ரசிகர்களுக்கு குழப்பத்தை ஏற்படுத்தியுள்ளது. இந்த தகவல் தற்போது சமூக வலைத்தளங்களில் வெளியாகி வைரலாகி வருகிறது …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *