February 24, 2024

இளையராஜா, ஏஆர் ரகுமான் ஓரமா போங்க..!! நீங்களே எவளோ நாளைக்கு  இசையமைப்பாளர் இருப்பீங்க ..?? இவர்களை தாண்டி சாதனை படைக்கும் 6 இசையமையமைப்பாளர்..??

சாதாரணமாக ஒரு படத்தில் திரைக்கதை, நடிகர், நடிகைகள், ஆக்சன் காட்சிகள் எவ்வளவு முக்கியமோ அதை காட்டிலும் அந்த படத்தில் இடம்பெற்ற பாடல்கள் தான் சில சமயங்களில் படத்தின் வெற்றியை தீர்மானிக்கிறது. அப்படி பாடல்களுக்காகவே வெற்றி பெற்ற படங்களும் உண்டு. ஒரு காலகட்டத்தில் இளையராஜா, ஏஆர் ரகுமான் பாடல்கள் தான் ரசிகர்கள் மத்தியில் அமோக வரவேற்பை பெற்றது. இப்போது இவர்களை ஓரம் கட்டி அடுத்த தலைமுறையினர் பட்டையை கிளப்பி வருகிறார்கள்.

மெலோடி   பாடல்களில்   பூந்து   விளையாடும்   ஜிவி   பிரகாஷ்   கடைசியாக   சூரரைப்போற்று படத்திற்காக   தேசிய   விருது   வாங்கி   இருந்தார்.   மேலும்   இப்போது   பா ரஞ்சித்,   விக்ரம் கூட்டணியில்   உருவாகும்   தங்கலான்   மற்றும்   தனுஷின்   கேப்டன்   மில்லர்   ஆகிய படங்களுக்கு   ஜிவி   பிரகாஷ்   இசையமைத்து   வருகிறார்.

இளம்   இசையமைப்பாளரான   அனிருத்   கடந்த   ஆண்டு   வெளியான   படங்களில்   டான், பீஸ்ட், விக்ரம்,   திருச்சிற்றம்பலம்    போன்ற   படங்களுக்கு   அனிருத்   இசையமைத்திருந்தார். அதேபோல்   இந்த   வருடமும்   டாப்   நடிகர்களான   ரஜினியின்   ஜெயிலர்,   கமலின்  இந்தியன் 2, விஜய்யின்  தளபதி 67   போன்ற   படங்களில்   அனிருத்    தான்   இசையமைக்கிறார்.

தெலுங்கு   படங்களில்   அதிகம்   கவனம்   செலுத்தி   வருபவர்   தமன்.   சிவகார்த்திகேயனின் பிரின்ஸ்   படத்திற்கு   தமன்   தான்   இசையமைத்திருந்தார்.  தளபதி   விஜய்  வாரிசு   படத்தில் தமன்   கூட்டணி   போட்டிருந்தார்.  இப்போது   ஷங்கர்,   ராம்சரண்    கூட்டணியில்    உருவாகும் படத்திற்கு   தமன்   இசையமைத்து   வருகிறார்.

அஜித்தின்   வலிமை   படத்திற்கு   ஜிப்ரான்    பிஜிஎம்   போட்டு   இருந்தார்.   இதற்கு    ரசிகர்கள் மத்தியில்   கிடைத்த    வரவேற்பின்    காரணமாக   துணிவு   படத்திற்கும்    ஜிப்ரான்   இசை யமைப்பாளராக   பணியாற்றினார்.   இப்போது   தமிழில்   பகைவனுக்கு   அருள்வாய்   படத்திற்கு ஜிப்ரான்   இசையமைக்கிறார்.

பாடகர்,   பாடலாசிரியர்,   இசையமைப்பாளர்,   தயாரிப்பாளர்   என   பன்   முகத்தன்மை கொண்டவர்   சாம்   சி எஸ். கைதி,   விக்ரம்   வேதா,   ராக்கெட்ரி   நம்பி   விளைவு   போன்ற படங்களில்   இவர்   அற்புதமாக   இசையமைத்து   இருந்தார்.   2022-ல்   ரசிகர்கள்   கொண்டாடும் இசையமைப்பாளர்களில்   சாம்   சி எஸ்   இடம்பெற்றுள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *