April 29, 2024

சிம்புவுக்கு அந்த யோகமே இல்லையா ..?? ஜாதகத்தை பார்த்து அதிர்ச்சியான டி ராஜேந்தர் ..!! வெளியான ஷாக்கிங் தகவல் ..!!

இயக்குனரும் நடிகருமான டி ராஜேந்தரின்  மூத்த மகன் தான் நடிகர் சிம்பு . ஆரம்பத்தில் குழந்தை நட்சத்திரமாக கலங்கி கொண்டு வந்த சிம்பு தந்தை இயக்கிய காதல் அழிவதில்லை என்ற படத்தின் மூலம் கதாநாயகனாக அறிமுகமானார்.  இப்படி அறிமுகமான குறிப்பிட்ட காலகட்டத்திலேயே தவிர்க்க முடியாத நடிகராக கலக்கிக் கொண்டு வந்தார் நடிகர் சிம்பு .

மேலும் சமீபத்தில் இவருடைய நடிப்பில் வெளியான மாநாடு ,வெந்து தணிந்தது காடு  , பத்து தல போன்ற திரைப்படங்கள் நல்ல வரவேற்பை பெற்றது . இதை அடுத்து தற்போது கமல்ஹாசன் தயாரிப்பில் கண்ணும் கண்ணும் கொள்ளையடித்தால் பட இயக்குனரான தேசிங்கு பெரியசாமி,

இயக்கி வரும் புதிய படத்தில் நடித்துக் கொண்டு வருகிறார் நடிகர் சிம்பு . மேலும் 40 வயதாகியும் கூட இன்னும் திருமணம் செய்து கொள்ளாமல் சிங்களாக சுற்றி  வருகிறார் நடிகர் சிம்பு . அது மட்டுமல்லாமல் ஏற்கனவே பல நடிகைகளை காதலித்தும் இருந்தார் சிம்பு .

ஆனால் ஒண்ணு கூட கைகூடவில்லை .  இப்படி இருக்கும் நிலையில் தன்னுடைய  மகனுக்காக பெண் தேடிய டி ராஜேந்தர் சிம்புவின் ஜாதகத்தைப் பார்த்து அதிர்ச்சி அடைந்திருக்கிறார் . அந்த வகையில் ஜாதகத்தின் மீது அதிக நம்பிக்கையுள்ள டி ராஜேந்தர் சிம்புவின் ஜாதகத்தை,

பார்த்தபோது சிம்புவுக்கு கல்யாண யோகமே இல்லை என்று ஜோசியர் கூறிவிட்டாராம் . இதனால் என்ன செய்வது என்று தெரியாமல் முழித்துக் கொண்டிருக்கிறாராம் டி ராஜேந்தர்…

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *