May 3, 2024

எனக்கு அப்படி நடிக்கணும்னு ரொம்ப நாள் ஆசை ..!! ஆனா யாரும் வாய்ப்பு தரல ..!! பேட்டியில் புலம்பிய ஷகிலா..!!

ஷகிலா ஓர் பிரபலமான தமிழ் திரைப்பட நடிகை ஆவார்.  ஆரம்பத்தில் அந்த மாதிரி படங்களில் நடித்து பிரபலமடைந்த ஷகிலா கடந்த 1994 ஆம் ஆண்டு வெளியான ஜல்லிக்கட்டு காளை என்ற படத்தின் மூலம் தமிழ் சினிமாவிற்கு நடிகையாக அறிமுகமானார் . பின்னர் இந்த படத்தை தொடர்ந்து மறுமலர்ச்சி ,ஜெயம், தூள், வாத்தியார் ,அழகிய தமிழ் மகன், வியாபாரி, சிவா மனசுல சக்தி,

பாஸ் என்கிற பாஸ்கரன் போன்ற திரைப்படங்களில் நடித்திருந்தார் நடிகை ஷகிலா . மேலும் இவர் தமிழ் மொழி மட்டுமல்லாமல் தெலுங்கு , மலையாளம் மற்றும் கன்னட மொழி படங்களிலும் நடித்திருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது . இப்படி வெள்ளித்திரையில் ,

கலக்கிக்கொண்டு வந்த ஷகிலா ஒரு கட்டத்தில் சின்னத்திரையில் ஒளிபரப்பான பிக்பாஸ் , குக் வித் கோமாளி , சிங்கப்பெண்ணே போன்ற பல நிகழ்ச்சிகளில் கலந்துகொண்டு பிரபலமானார் . இந்த நிகழ்ச்சிகளால் ஷகிலா மீது இருந்த தவறான பார்வை மறைந்தது என்று ,

தான் சொல்ல வேண்டும் .இப்படி இருக்கும் நிலையில் சமீபத்திய  பேட்டி ஒன்றில் பேசிய ஷகிலா கூறியதாவது , நல்ல கதாபாத்திரத்தில் நடித்தால் மக்கள் அதை ஏற்றுக்கொள்ள மாட்டார்கள். மேலும் எனக்கு அம்மா கதாபாத்திரத்தில் நடிக்க வேண்டும் என்பது ரொம்ப நாள் ஆசை .

ஆனால் எந்த ஒரு இயக்குனரும் எனக்கு அப்படி ஒரு வாய்ப்பை தரவே இல்லை என்று கூறியிருந்தார் நடிகை ஷகிலா. தற்போது இந்த தகவல் இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *