April 30, 2024

நண் பன் பட த்தில் முத லில் நடி க்க இரு ந்தது வி ஜய் இல் லை யா ..?? இந் த நடி கர் தா ன் நடி க்க இருந் தா ரா ..?? க டைசி நேர த்தில் ஆ ளை மா ற்றிய ஷ ங் கர் ..!!

தமிழ் சினிமா உலகில் கடந்த 2012 ஆம் ஆண்டு இயக்குனர் ஷங்கர் இயக்கத்தில் விஜய் நடிப்பில் வெளியான திரைப்படம் தான் நண்பன்.  அதுவரை தன்னுடைய கதையில் படம் இயக்கி வந்த இயக்குனர் ஷங்கர் முதல் முறையாக ஹிந்தியில் வெளியான படத்தை ரீமேக் செய்திருந்தார் . இந்த படத்தில்  விஜய் உடன் இணைந்து ஜீவா ,ஸ்ரீகாந்த் ,

இலியானா ,சத்யராஜ், சத்யன் ,மனோபாலா , எஸ் ஜே சூர்யா போன்ற பல பிரபலங்கள் நடித்திருந்தனர் . இந்த படத்திற்கு ஹாரிஸ் ஜெயராஜ் இசையமைத்து இருந்தார் . இப்படி வெளியான திரைப்படம் சூப்பர் ஹிட் படமாக அமைந்தது மட்டுமல்லாமல் 150 கோடிக்கு மேல்,

வசூல் செய்து சாதனை படைத்தது .  அதுவரை ஆக்சன் ஹீரோவாக நடித்து வந்த நடிகர்  விஜய் இந்த படத்தில் காமெடி கலந்த கதாபாத்திரத்தில் நடித்திருந்தார் . ஆனால் இந்த திரைப்படத்தில் முதலில் நடித்து இருந்தது வேறொரு நடிகர் தானாம் .

அவர் வேறு யாருமில்லை நடிகர் சூர்யா தான் . அப்படி இந்தப் படத்தில் ஹீரோவாக நடிக்க வைக்க முதன் முதலில் நடிகர் சூர்யாவை தான் அணுகினாராம் இயக்குனர் ஷங்கர் . ஆனால் அப்போது சூர்யா வேறொரு படத்தில் நடித்து இருந்ததால் அவருடைய கால்ஷிட் ,

கிடைக்கவில்லையாம் . இதனால் விஜய் இந்த படத்தில் நடித்திருந்தாராம் . ஒருவேளை  நடிகர் சூர்யா இந்தப் படத்தில்  நடித்திருந்தால் இந்த அளவிற்கு இந்த படம் வெற்றி பெற்று இருக்குமா என்பது சந்தேகம் தான் என்று கூறப்படுகிறது…

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *