April 27, 2024

நானும் கர்ப்பமாக இருக்கிறேன் ..!! என்னுடைய கணவரும் கர்ப்பமாக இருக்கிறார் ..!! ரசிகர்களுக்கு ஷாக் கொடுத்த அமலா பால் ..!!

அமலாபால் ஓர் பிரபலமான தென்னிந்திய திரைப்பட நடிகை ஆவார்.  கடந்த 2010 ஆம் ஆண்டு வெளியான வீரசேகரன் என்ற படத்தின் மூலம் தமிழ் சினிமாவிற்கு நடிகையாக அறிமுகமானார் நடிகை அமலா பால் . இருந்தாலும் இவர் ரசிகர்களிடையே பெரிய அளவில் பிரபலமானது மைனா படத்தின் மூலம் தான் . பின்னர் இந்த படத்தை தொடர்ந்து தெய்வ திருமகள், காதல் சொதப்புவது எப்படி ,தலைவா,

நிமிர்ந்து நில் , வேலையில்லா பட்டதாரி ,பசங்க 2 ,அம்மா கணக்கு, ராட்சசன் , ஆடை போன்ற பல திரைப்படங்களில் நடித்திருந்தார்.  மேலும் இவர் தமிழ் மொழி மட்டுமல்லாமல் தெலுங்கு ,மலையாளம், கன்னடம் மற்றும் இந்தி மொழி படங்களிலும் நடித்திருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

இப்படி நடித்துக்கொண்டிருக்கும் போதே  இயக்குனர் ஏ எல் விஜய்யை காதலித்து திருமணம் செய்து கொண்டார் நடிகை அமலா பால்.  ஆனால் இவர்களின் திருமண வாழ்க்கை மூன்று வருடங்களிலேயே முடிந்துவிட்டது . இதன் பிறகு சிங்களாக இருந்து வந்த அமலாபால் கடந்த வருடம்,

அவருடைய நண்பரான ஜகத் தேசை என்பவரை திருமணம் செய்து கொண்டார்.  மேலும் திருமணமான இரண்டு மாதங்களிலேயே கர்ப்பமாக இருப்பதாக அறிவித்திருந்தார் நடிகை அமலா பால்.  இதையே ரசிகர்களால் ஏற்றுக் கொள்ள முடியவில்லை.  இப்படி இருக்கும் நிலையில்,

இப்போது நான் மட்டுமல்ல என்னுடைய கணவரும் தான் கர்ப்பமாக இருக்கிறார் என்று அவருடைய தொப்பையை தொட்டு போஸ் கொடுத்திருக்கிறார் நடிகை அமலாபால் . இதோ அந்த புகைப்படத்தை நீங்களும் பாருங்க…

 

 

View this post on Instagram

 

A post shared by Amala Paul (@amalapaul)

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *