April 27, 2024

நம் மையெல் லாம் சிரி க்க வை த்த ..!! “மொ ட்டை” ராஜே ந்திரனு க்கு இத்த னை சோ கங் களா ..?? ஒரே நா ளில் தலை கிழா க மாறிய வா ழ் க்கை ..!!

மொட்ட ராஜேந்திரன் ஓர் பிரபலமான தமிழ் திரைப்பட வில்லன் நடிகர் மற்றும் காமெடி நடிகர் ஆவார் . ஆரம்பத்தில் ஸ்டன்ட் கலைஞராக பணிபுரிந்து வந்த மொட்டை ராஜேந்திரன் கடந்த 2009 ஆம் ஆண்டு இயக்குனர் பாலா இயக்கத்தில் வெளியான நான் கடவுள் என்ற படத்தின் மூலம் வில்லனாக அறிமுகமானார் . இதன் பிறகு பல திரைப்படங்களில் வில்லனாக நடித்து வந்த மொட்டை ராஜேந்திரன்,

ஒரு கட்டத்தில் காமெடி நடிகராகவும் நடிக்க தொடங்கினார் . பின்னர் ஒரு கட்டத்தில் அவர் இல்லாத படங்களே கிடையாது என்று சொல்லும் அளவிற்கு பல திரைப்படங்களில் நடித்துக் கொண்டு வந்தார் மொட்டை ராஜேந்திரன் . குறிப்பாக அவருக்கு அடையாளமே அவருடைய மொட்டை தலை தான்.

ஆனால் சில வருடங்களுக்கு முன்பு மிகவும் அடர்த்தியான முடியுடன் இருந்திருக்கிறார் ராஜேந்திரன் . அந்த வகையில் ஆரம்பத்தில் ஸ்டன்ட் கலைஞராக பணியாற்றி வந்த மொட்டை ராஜேந்திரன் சிறுவயதிலிருந்தே பல கேலி கிண்டலுக்கு ஆளாகியுள்ளாராம் . இதன் பிறகு மலையாள படத்தின் ,

சண்டைக் காட்சிக்காக ஆற்றில் இரண்டு முறை குதித்தாராம் . ஆனால் அந்த ஆற்றில் கெமிக்கல் கலக்கப்பட்டதை யாருமே சொல்லவில்லையாம் . பின்னர் அவர் அந்த ஆற்றில் இருந்து மேலே வரும் போது பாதி முடி மீசை எல்லாம் கையோடு வந்துவிட்டதாம் . ஏற்கனவே,

கேலி கிண்டலுக்கு ஆளான இவருக்கு இந்த விஷயம் மிகப்பெரிய பயத்தை ஏற்படுத்தியதாம்.  இதனால் கிட்டத்தட்ட ஆறு மாதமாக வீட்டிலேயே முடங்கி கிடந்தாராம் . இதன் பிறகு தான் தன்னுடைய 52 வது வயதில் நான் கடவுள் படத்தின் மூலம் வில்லனாக அறிமுகமானாராம்…

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *