April 27, 2024

இந் த நி லை மாற னும் ..!! உதய நிதி க்கு ஷோ பா , மா ரி செல் வராஜ் க்கு சே ரா ..?? இவர் களே இப் படி பண்ண லா மா ..?? வறுத் தெடு க்கும் ரசி கர்க ள் ..!!

கடந்த வாரம் இயக்குனர் மாரி செல்வராஜ் இயக்கத்தில் உதயநிதி ஸ்டாலின் நடிப்பில் வெளியான திரைப்படம் தான் மாமன்னன் . இந்த படத்தில் உதயநிதி ஸ்டாலின் வடிவேலு, பகத் பாசில், கீர்த்தி சுரேஷ், அழகம்பெருமாள் ,கீதா கைலாசம் ,லால், விஜயகுமார் போன்ற பல பிரபலங்கள் நடித்திருந்தனர் . இப்படி வெளியான திரைப்படம் சூப்பர் ஹிட் படமாக அமைந்துள்ளது . குறிப்பாக இந்த படத்தில்,

அனைவரும் சமம் என்ற கருத்தை முன்வைத்து எடுத்திருந்தார்கள் . ஆனால் அதற்கு முன்மாதிரியாக இருக்கும் நடிகர்களே தற்போது அதற்கு எதிராக உள்ளனர் . அந்த வகையில் மாமன்னன் படத்தின் வெற்றியைத் தொடர்ந்து வடிவேலுவின் வீட்டிற்கு உதயநிதியும் மாரி செல்வராஜூம் சென்றுள்ளனர்.

அப்போது உதயநிதியை சோபாவில் உட்கார வைத்த வடிவேலு , மாரி செல்வராஜை சேரில் தான் உட்கார வைத்திருந்தார் .  அப்படி படத்தில் பக்கம் பக்கமாக வசனம் பேசிய இவர்களே  இப்படி செய்தது தற்போது நெட்டிசன்களின் கேள்விக்கு ஆளாகியுள்ளது . இதை பார்த்த பலரும் இந்த நிலை மாறனும் என்று கலாய்த்து தள்ளி வருகின்றனர்…

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *