April 26, 2024

ஒரு ரூபாய் கூட சம்பளம் வாங்காமல் ..!! 96 படத்தில் நடித்த விஜய் சேதுபதி ..!! காரணத்தை கேட்டா நீங்களே வியந்து போயிடுவீங்க ..!

தமிழ் சினிமா உலகில் ஒரு தனித்துவமான நடிகராக இருந்து வருபவர் நடிகர் விஜய் சேதுபதி.  ஹீரோ ,வில்லன்,  குணச்சித்திர நடிகர் என்று கிடைக்கும் கதாபாத்திரங்களில் எல்லாம் ஸ்கோர்  செய்து வரும் நடிகர்  விஜய் சேதுபதி ஒரு படத்திற்கு 10 முதல் 20 கோடி வரை சம்பளம் வாங்கி வருவதாக கூறப்படுகிறது.  ஆனால் 96 படத்திற்காக ஒரு ரூபாய் கூட சம்பளம் வாங்கவில்லையாம் விஜய் சேதுபதி .

அந்த வகையில் கடந்த 2018 ஆம் ஆண்டு இயக்குனர் பிரேம்குமார் இயக்கத்தில் வெளியான திரைப்படம் தான் 96 . இந்த படத்தில் விஜய் சேதுபதி ,திரிஷா, தேவதர்ஷினி ,ஜனகராஜ் ,ஆதித்யா பாஸ்கர், கௌரி கிஷன் ,பகவதிப் பெருமாள் ,ஆடுகளம் முருகதாஸ் போன்ற பல பிரபலங்கள்,

நடித்திருந்தனர் . இப்படி வெளியான திரைப்படம் சூப்பர் ஹிட் படமாக அமைந்தது . அந்த அளவிற்கு இந்த திரைப்படம் ரசிகர்களின் மனதில் பெரிய தாக்கத்தை ஏற்படுத்தியது என்று தான் சொல்ல வேண்டும் . ஆனால் இந்த படத்திற்காக விஜய் சேதுபதி ஒரு ரூபாய் கூட சம்பளமே ,

வாங்க வில்லையாம் . அதற்கு காரணம் என்னவென்றால் இந்தப் படத்தின் இயக்குனரான பிரேம்குமார் விஜய் சேதுபதியின் நண்பராம் . அதோடு விஜய் சேதுபதி நடிப்பில் வெளியான  நடுவுல கொஞ்சம் பக்கத்த காணோம் படமே பிரேம்குமாரின் வாழ்க்கையில் உண்மையாக நடந்த ,

கதை தானாம் .  இதனால் தான்  விஜய் சேதுபதி இந்த படத்திற்காக சம்பளமே  வாங்கவில்லை என்று கூறப்படுகிறது. இதைப்பார்த்த ரசிகர்கள் இந்த காலத்திலும் இப்படியொரு நடிகரா என்று வியப்பில் கூறிவருகின்றனர் …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *