May 2, 2024

முதலாம் ஆண்டு திருமண நாளில்..!! மனைவியுடன் எடுத்த புகைப்படங்களை பகிர்ந்த ஹரிஷ் கல்யாண் ..!! இதோ நீங்களும் பாருங்க ..!!

தற்போது தமிழ் சினிமாவை கலக்கி வரும் இளம் நடிகர்களில் ஒருவர் தான் நடிகர் ஹரிஷ் கல்யாண் . கடந்த 2010 ஆம் ஆண்டு வெளியான சிந்து சமவெளி என்ற படத்தின் மூலம் நடிகராக அறிமுகமானார் நடிகர் ஹரிஷ் கல்யாண்.  பின்னர் இந்த படத்தைத் தொடர்ந்து பல திரைப்படங்களில் நடித்திருந்தாலும் இவர் ரசிகர்களிடையே பெரிய அளவில் பிரபலமானது.  கடந்த 2018 ஆம் ஆண்டு வெளியான பியார் பிரேமா காதல் படத்தின்,

மூலம்தான் . இந்த திரைப்படம் இவருக்கு மிகப்பெரிய வரவேற்பை பெற்றுத் தந்தது . இந்த படத்தைத் தொடர்ந்து இஸ்பேட் ராஜாவும் இதய ராணியும் ,ஜெர்சி, தனுசு ராசி நேயர்களே ,தாராள பிரபு,  ஓ மணப்பெண்ணே போன்ற பல திரைப்படங்களில் நடித்திருந்தார்.

இதை அடுத்து தற்போது பார்க்கிங்,  நூறு கோடி வானவில், டீசல் , ரப்பர் பந்து என்று நான்கு திரைப்படங்களுக்கு மேல் கைவசம் வைத்திருக்கிறார் நடிகர் ஹரிஷ் கல்யாண்.  இதனிடையே கடந்த வருடம் நர்மடா உதயகுமார் என்பவரை திருமணம் செய்து கொண்டார் ஹரிஷ் கல்யாண் .

இப்படி இருக்கும் நிலையில் இவர்கள் இருவருக்கும் திருமணம் ஆகி ஒரு வருடங்கள் ஆன நிலையில் , அதை கொண்டாடும் வகையில் தன்னுடைய மனைவியுடன் இருக்கும் புகைப்படங்களை வெளியிட்டுள்ளார் ஹரிஷ் கல்யாண்.  இதோ அந்த புகைப்படங்களை நீங்களும் பாருங்க…

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *