April 28, 2024

காசு கொடுத்து தான் அர்ச்சனா டைட்டில் வின்னர் ஆனாரா ..?? குண்டை தூக்கிபோட்ட பிரபல நடிகை ..!!

பிக் பாஸ் சீசன் 7 கடந்த சில தினங்களுக்கு முன்பு வெற்றிகரமாக முடிவடைந்தது . எப்போதும் போல இந்த சீசனையும் உலகநாயகன் கமல்ஹாசன் தான் தொகுத்து வழங்கினார் . மேலும் இந்த போட்டியில் மொத்தம் 18 போட்டியாளர்கள் கலந்து கொண்டனர்.  பின்னர் வைல்ட் கார்டு மூலம் பிக் பாஸ் வீட்டிற்குள் வந்தவர் தான் வி ஜே அர்ச்சனா . ராஜா ராணி 2 சீரியலில் நடித்து பிரபலமான அர்ச்சனா ,

பின்னர் பல சீரியல்களில் நடித்திருந்தார் . இப்படி இருக்கும் நிலையில் வைல்ட்  கார்டு போட்டியாளராக பிக் பாஸ் வீட்டிற்குள் வந்த விஜே அர்ச்சனா டைட்டில் வின்னர் பட்டத்தை வென்றார் . மேலும் 50 லட்சம் பரிசு தொகை மட்டுமல்லாமல் ஒரு புது வீடு ,புது காரையும் தட்டி சென்றார்.

விஜே அர்ச்சனா.  இப்படி இருக்கும் நிலையில் முன்னாள் போட்டியாளரான வனிதா விஜயகுமார் அர்ச்சனா டைட்டில் வின்னர் பட்டத்தை வாங்கியது குறித்து கூறியதாவது , பிக் பாஸ் மேடையில் ஜனநாயகம் தோற்று பண நாயகம் ஜெயித்து விட்டது .

அர்ச்சனாவுக்கு முதலிடம் மாயாவுக்கு மூன்றாவது இடம் என்பதை நினைக்கும் போது கேவலமாக இருக்கிறது . மேலும் அர்ச்சனா சமூக வலைத்தளங்களில் ப்ரொமோஷன் செய்து தான் டைட்டில் வின்னர் பட்டத்தை வாங்கி இருக்கிறார் . என்னை பொருத்தவரை ,

இந்த நிகழ்ச்சியில் அர்ச்சனா டைட்டில் வின்னர் பட்டத்தை வென்றது என்னால் ஏற்றுக் கொள்ளவே முடியவில்லை என்று வெளிப்படையாக கூறியிருந்தார் நடிகை வனிதா…

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *