May 5, 2024

வீடியோ எடுத்தது ஒரு குத்தமா ..?? ரசிகரின் போனை வாங்கி டெலிட் செய்த அஜித் ..!! காட்டுத்தீ போல பரவும் வீடியோ ..!!

தமிழ் சினிமாவில் இருக்கும் நடிகர்களிலேயே அஜித் கொஞ்சம் வித்தியாசமானவர் என்று தான் சொல்ல வேண்டும்.  காரணம் அப்போதிலிருந்து இப்போது வரை பப்ளிசிட்டி தேடி கொள்ளாதவர் அஜித் . அது மட்டுமல்லாமல் பல வருடங்களாக சமூக வலைத்தள பக்கமே தலை காட்டாமல் இருந்து வருகிறார் நடிகர் அஜித் . அதோடு  ரசிகர் மன்றம் இருந்தால் ரசிகர்கள் தனக்காக தேவையில்லாமல் நேரத்தை  வீண் அடிப்பர்கள் ,

என்பதற்காக ரசிகர் மன்றத்தையே கலைத்தார் அஜித் .அப்படி இருந்தும் அவருடைய ரசிகர்கள் அஜித் என்றால் உயிராக இருக்கிறார்கள் .  அந்த வகையில் அஜித்தின் ஒவ்வொரு படத்தின் ரிலீஸின் போது ரசிகர்கள் அவருடைய படத்தை தலையில் தூக்கிவைத்து கொண்டாடி வருகின்றனர் .

ஆனால் அண்மைக்காலமாக அஜித் செய்யும் ஒரு சில விஷயங்கள் அஜித் ரசிகர்களுக்கு அதிருப்தியை ஏற்படுத்தி வருகிறது.  அந்த வகையில் தற்போது இயக்குனர் மகிழ் திருமேனி இயக்கத்தில் உருவாகி வரும் விடாமுயற்சி படத்தின் படப்பிடிப்பிற்காக துபாயில் இருந்து வருகிறார் ,

நடிகர் அஜித் . இந்த படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது . அப்போது அஜித் வருவதை பார்த்த ரசிகர் ஒருவர் அஜித்தை வீடியோ எடுத்திருக்கிறார் . பின்னர் அந்த ரசிகரை கூப்பிட்டு அந்த வீடியோவை அஜித்தை டெலிட் செய்து இருக்கிறார்.

இந்த வீடியோ தற்போது இணையத்தில் தீயாய் பரவி வருகிறது.  இதைப் பார்த்த ரசிகர்கள் வீடியோ எடுத்தது ஒரு குத்தமா என்று கேள்வி எழுப்பி வருகின்றனர்.  இதோ அந்த வீடியோவை நீங்களும் பாருங்க…

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *