May 3, 2024

மாயமான லால் சலாம் படத்தின் முக்கிய காட்சிகள் ..!! அதிர்ச்சியில் சூப்பர் ஸ்டாரின் மகள் ..!! அடுத்து என்ன செய்யப்போகிறார்கள் தெரியுமா ..??

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் மூத்த மகளான ஐஸ்வர்யா 3 , வை ராஜா வை போன்ற படங்களை இயக்கியிருந்தார் . பின்னர் பல வருடங்கள் இடைவெளிக்கு பிறகு லால் சலாம் என்ற படத்தை இயக்கி முடித்தார் ஐஸ்வர்யா . இந்த படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் விஷ்ணுவிஷால், விக்ராந்த் ,நிரோஷா ,ஜீவிதா ராஜசேகர், கபில்தேவ் போன்ற பல பிரபலங்கள் நடித்துள்ளனர்.  இவர்களோடு சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த்,

ஒரு சிறப்பு கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறார் . லைக்கா நிறுவனம் தயாரித்த இந்த படத்திற்கு ஏ ஆர் ரகுமான் இசையமைத்திருந்தார் . இதனாலையே இந்த படத்திற்கு மிகப்பெரிய எதிர்பார்ப்பு இருந்து வருகிறது.  அதோடு இந்த திரைப்படம் வருகின்ற பொங்கல் பண்டிகை அன்று,

வெளியாக உள்ளதாகவும் தகவல் வெளியானது . இப்படி இருக்கும் நிலையில் இந்தப் படத்தின் முக்கிய காட்சிகள் காணாமல் போனதாக அதிர்ச்சி தகவல் வெளியாகி உள்ளது.  அந்த வகையில் சூப்பர் ஸ்டார் உட்பட மற்ற நடிகர்களை வைத்து கிட்டத்தட்ட 23 நாட்கள் படப்பிடிப்பை நடத்தி,

இருக்கிறார் ஐஸ்வர்யா.  அந்த காட்சிகள் அடங்கிய ஹார்ட் டிஸ்க்கில்  தற்போது ஒன்றுமே இல்லையாம் . இதனால் லால் சலாம் பட குழுவினர் அதிர்ச்சி அடைந்துள்ளனர் . இதனால் இந்த காட்சிகளை எப்படியாவது எடுத்து விட வேண்டும் என்பதற்காக நவீன தொழில்நுட்பத்தை,

பயன்படுத்த உள்ளார்களாம் . அது மட்டும் சரியாக நடக்கவில்லை என்றால் மீண்டும் சூப்பர் ஸ்டார் மற்ற நடிகர்களை வைத்த மீண்டும் சூப்பர் ஸ்டார் மற்ற நடிகர்களை வைத்து முதலில் இருந்து எடுத்து தான் ஆக வேண்டும் என்றும் கூறப்படுகிறது…

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *