April 24, 2024

காதலர்களுக்கு இதை விட வேறென்ன வேண்டும்..?? காதல் கணவருடன் தாஜ்மஹாலுக்கு சென்ற “குக் வித் கோமாளி” ரித்திகா ..!!

ரித்திகா தமிழ்ச்செல்வி ஓர் பிரபலமான தமிழ் தொலைக்காட்சி சீரியல் நடிகை ஆவார் . கடந்த 2018 ஆம் ஆண்டு விஜய் தொலைக்காட்சியில் ஒளிப்பரப்பான ராஜா ராணி என்ற சீரியல் மூலம் அறிமுகமானார் நடிகை ரித்திகா தமிழ்ச்செல்வி . பின்னர் இந்த சீரியலை தொடர்ந்து சிவா மனசுல சக்தி ,திருமகள், பாக்கியலட்சுமி போன்ற பல சீரியல்களில் நடித்து தமிழ் ரசிகர்கள் மத்தியில் பிரபலமானார் .

அதுமட்டுமல்லாமல் விஜய் தொலைக்காட்சியில் ஒளிப்பரப்பான குக் வித் கோமாளி என்ற நிகழ்ச்சியின் மூலமும் பெரிய அளவில் பிரபலமானார் நடிகை ரித்திகா தமிழ்ச்செல்வி.  குறிப்பாக இவர் பாலாவுடன் செய்த காமெடி கலாட்டாக்களை இன்றளவும் யாரும் மறந்திருக்க மாட்டார்கள்.

இப்படி இருந்த நிலையில் கடந்த 2022 ஆம் வருடம் விஜய் டிவியில் பணியாற்றிய வினு என்பவரை திருமணம் செய்து கொண்டார் நடிகை ரித்திகா தமிழ்செல்வி . இப்படி இருக்கும் நிலையில் சமூக வலைத்தளங்களில் எப்போதும் ஆக்டிவாக இருந்து வரும் ரித்திகா தமிழ் செல்வி ,

காதலர் தினத்தை முன்னிட்டு தன்னுடைய கணவருடன் காதலின் சின்னமான தாஜ்மகாலுக்கு சென்று இருக்கிறார் .தற்போது அந்த புகைப்படங்களை பகிர்ந்துள்ளார் நடிகை ரித்திகா தமிழ்ச்செல்வி . இதோ வந்த புகைப்படங்களை நீங்களும் பாருங்க…

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *