April 26, 2024

கிறிஸ்துமஸ் தாத்தாவாக மாறிய ரோஜா ..!! இந்த காலத்தில் இப்படியொரு அமைச்சரா ..?? நடிகையின் செயலுக்கு குவியும் பாராட்டுக்கள் ..!!

ரோஜா ஓர் இந்திய திரைப்பட நடிகை மற்றும் அரசியல்வாதி ஆவார் . கடந்த 1992 ஆம் ஆண்டு வெளியான செம்பருத்தி என்ற படத்தின் மூலம் கதாநாயகியாக அறிமுகமானார் நடிகை ரோஜா . பின்னர் இந்த படத்தை தொடர்ந்து சூரியன் ,உழைப்பாளி, வீரா, தமிழ்ச்செல்வன், உன்னிடத்தில் என்னை கொடுத்தேன் ,சுயம்வரம் ,திருப்பதி ஏழுமலை வெங்கடேசா போன்ற பல திரைப்படங்களில் நடித்து ,

தனக்கென ஒரு தனி இடத்தை பிடித்துக் கொண்டார் நடிகை ரோஜா . மேலும் இவர் தமிழ் மொழி மட்டுமல்லாமல் தெலுங்கு ,மலையாளம் மற்றும் கன்னட மொழி படங்களிலும் நடித்திருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது . இப்படி நடித்துக் கொண்டிருக்கும் போதே ,

இயக்குனர் ஆர்கே செல்வமணியை  திருமணம் செய்து கொண்டார் நடிகை ரோஜா . திருமணமான இவர்களுக்கு ஒரு மகள் , ஒரு மகன் உள்ளனர். மேலும் திருமணத்துக்கு பிறகு ஒரு சில படங்களில் நடித்து வந்த ரோஜா தற்போது முழுநேர அரசியல்வாதியாகவே மாறிவிட்டார் .

அந்த வகையில் தற்போது ஆந்திராவில் அமைச்சராக இருந்து வரும்  ரோஜா கிறிஸ்துமஸ் பண்டிகையை முன்னிட்டு கிறிஸ்துமஸ் தாத்தா வேடத்தில் மாற்றுத்திறனாளி ஒருவரின் குடும்பத்திற்கு சென்று கேக் வெட்டி கொண்டாடியது மட்டுமில்லாமல் அவருக்கு இரண்டு லட்சத்தை ,

பரிசாக வழங்கியிருக்கிறார் . இதைப்பார்த்த ரசிகர்கள் ரோஜாவின் செயலுக்கு பாராட்டுக்களை தெரிவித்து வருகின்றனர் . தற்போது அந்த புகைப்படங்கள் இணையத்தை கலக்கிக்கொண்டு  வருகிறது…

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *