April 29, 2024

காதல் ஓவியம் பட நடிகரை ஞாபகம் இருக்கா ..?? 40 வருடங்கள் கழித்து தலைகாட்டிய நடிகர் ..!! ஆளே அடையாளம் தெரியலையே ..??

தமிழ் சினிமா உலகில் 80, 90 காலகட்டங்களில் கலக்கி வந்த பல நடிகர்கள் தற்போது என்ன ஆனார்கள்.? எப்படி உள்ளார்கள் .? என்று எந்த ஒரு தகவலும் தெரியாமல் இருந்து வருகிறது. அப்படி 40 வருடங்கள் கழித்து பாரதிராஜா பட நடிகரின் புகைப்படம் வெளியாகியுள்ளது . அவர் வேறு யாரும் இல்லை நடிகர் கண்ணன் தான்.  கடந்த 1982 ஆம் ஆண்டு இயக்குனர் பாரதிராஜா இயக்கத்தில் வெளியான திரைப்படம் தான்,

காதல் ஓவியம்.  இந்த படத்திற்கு மணிவண்ணன் வசனம் எழுதியிருந்தார்.  இந்தப் படத்தில் கண்ணன் என்ற புதுமுக நடிகர் தமிழ் சினிமாவிற்கு அறிமுகமானார்.  இவரோடு இந்த படத்தில் ராதா ,கவுண்டமணி, ஜனகராஜ் ,ராதாரவி ,மணிவண்ணன் போன்ற பல பிரபலங்கள் நடித்திருந்தனர்.

இந்த படத்திற்கு இளையராஜா இசையமைத்திருந்தார் . பொதுவாகவே அந்த காலகட்டத்தில் பாரதிராஜாவின் படங்களுக்கு மிகப்பெரிய எதிர்பார்ப்பு இருக்கும் . ஆனால் இந்த திரைப்படம் வெளியாகி மோசமான வரவேற்பையே பெற்றது . ஆனால் இந்த படத்தில் வரும் பாடல்கள்,

எல்லாம் சூப்பர் ஹிட் அடித்தது . இதனால் தான் நடித்த முதல் திரைப்படமே தோல்வி அடைந்ததால் சினிமாவே வேண்டாம் என்று விலகி விட்டாராம் நடிகர் கண்ணன்.  இப்படி இருக்கும் நிலையில் இந்தப் படம் வெளியாகி 40 வருடங்களுக்கு மேல் ஆன நிலையில் அந்தப் படத்தில்,

கண்பார்வையற்றவராக நடித்திருந்த நடிகர் கண்ணனின் லேட்டஸ்ட் புகைப்படம் தற்போது இணையத்தில் வெளியாகி உள்ளது . இதை பார்த்த ரசிகர்கள் காதல் ஓவியம் படத்தில் வரும் நடிகரா இவர் .? ஆளே அடையாளம் தெரியலையே என்று கூறி வருகின்றனர்…

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *