April 25, 2024

சூப்பர் ஸ்டாரை பகைத்துக்கொண்டால் இது தான் கதி ..!! லோகேஷின் நண்பர் என்ன ஆனார் தெரியுமா ..??

தமிழ் சினிமாவை கலக்கி வரும் பிரபல இயக்குனர்களில் ஒருவர் தான் இயக்குனர் ரத்னகுமார்.  மேயாத மான் ,ஆடை , குலுகுலு போன்ற படங்களை இயக்கி பிரபலமான ரத்னகுமார் லோகேஷ் கனகராஜின் படங்களில்  அசோசியேட் இயக்குனராக இருந்து வந்தார் . இப்படி இருக்கும் நிலையில் லியோ படத்தின் வெற்றி விழாவின்போது ரஜினி சொன்ன காக்கா – கழுகு கதையை கேலி செய்யும் விதமாக,

விமர்சித்து பேசி இருந்தார் இயக்குனர் ரத்னகுமார் . இதனால் தன்னுடைய படத்தில் ரத்னகுமார் பணியாற்றக்கூடாது என்று சூப்பர் ஸ்டார் கண்டிஷன் போட்டு விட்டாராம் . இதன்பிறகு ராகவா லாரன்ஸ் நடிக்க உள்ள புதிய படத்தை இயக்க இருந்தார் ரத்னகுமார் .

ஆனால் சூப்பர் ஸ்டாரையே அவமதித்த இயக்குனரின் படத்தில் என்னால் நடிக்க முடியாது என்று லாரன்ஸ் கூறிவிட்டாராம் . இதனால் வேறு வழியில்லாமல் தற்போது இன்னொரு இயக்குனருடன் பணிபுரிய உள்ளாராம் ரத்னகுமார்…

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *