May 2, 2024

களைகட்டிய மீனாவின் 47 வது பிறந்தநாள் ..!! 12 மணிக்கே சர்பெரைஸ் கொடுத்த தமிழ் நடிகைகள் ..!! வெளிவந்த புகைப்படங்கள் ..!!

90 களில் தமிழ் சினிமாவை கலக்கி வந்த முன்னணி நடிகைகளில் ஒருவர் தான் நடிகை மீனா.  ஆரம்பத்தில் குழந்தை நட்சத்திரமாக நடித்து ரசிகர்களை கவர்ந்த நடிகை மீனா ஒரு கட்டத்தில் கதாநாயகியாகவும் ரசிகர்களை கவர்ந்தார்.  அதுவும் தமிழ் சினிமாவை கலக்கி வந்த பல முன்னணி நடிகர்களுடன் சிறுவயதிலேயே ஜோடி போட்டு நடித்து அசத்தியிருந்தார் நடிகை மீனா.

இதனால் தமிழ் ரசிகர்களின் கனவு கன்னியாகவும் இருந்து வந்தார் நடிகை மீனா.  இதனிடையே வித்யாசாகர் என்பவரை திருமணம் செய்து கொண்ட மீனாவுக்கு ஒரு மகளும் இருக்கிறார்.  இப்படி இருக்கும் நிலையில் கடந்த வருடம் மீனாவின் கணவர் திடீரென,

உடல் நலக்குறைவால் இறந்து விட்டார் . அதன் பிறகு கொஞ்சம் கொஞ்சமாக அதிலிருந்து மீண்டு வந்த மீனா பழைய படி படங்களில் நடித்து வருகிறார்.  இந்நிலையில் இன்று நடிகை மீனாவின் 47 வது பிறந்த நாளாம் . அப்படி நடிகை மீனாவின் 47வது பிறந்தநாள் ,

அவருடைய வாழ்க்கையில் மறக்க முடியாத அளவிற்கு நடைபெற்று இருக்கிறது. அந்த வகையில் 12 மணிக்கே  மீனாவின் வீட்டுக்கு வந்து சர்ப்ரைஸ் கொடுத்துள்ளார்கள் தமிழ் சினிமா நடிகைகள்.  அந்தப் புகைப்படங்கள் தற்போது இணையத்தில் வெளியாகியுள்ளது…

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *