April 26, 2024

காதலியை கரம்பிடித்த ஜெயராமின் மகன் ..!! பிரம்மாண்டமாக நடந்த நிச்சயதார்த்தம் ..!! வாழ்த்து மழையில் ரசிகர்கள் ..!!

காளிதாஸ் ஜெயராம் ஓர் பிரபலமான தமிழ் மற்றும் மலையாள திரைப்பட நடிகர் ஆவார் . பிரபல மலையாள நடிகரான ஜெயராமின் மகனான காளிதாஸ் ஆரம்பத்தில் குழந்தை நட்சத்திரமாக நடித்துக் கொண்டு வந்தார் . பின்னர் கடந்த 2016 ஆம் ஆண்டு வெளியான மீன் குழம்பும் மண்பானையும் என்ற படத்தின் மூலம் தமிழ் சினிமாவிற்கு  நடிகராக  அறிமுகமானார் காளிதாஸ் .

பின்னர் இந்த படத்தை தொடர்ந்து புத்தம்புது காலை, பாவ கதைகள் ,ஒரு பக்க கதை, விக்ரம், நட்சத்திரம் நகர்கிறது போன்ற பல திரைப்படங்களில் நடித்திருந்தார்  நடிகர் காளிதாஸ் . மேலும் காளிதாஸ் ஜெயராம் தொடர்ந்து தமிழ் மற்றும் மலையாள மொழி படங்களுக்கு,

அதிக முக்கியத்துவம் கொடுத்து நடித்துக் கொண்டு வருகிறார் . அந்த வகையில் தற்போது தமிழ் மற்றும் மலையாள மொழிகளில் மூன்று படங்கள் கைவசம் வைத்திருக்கிறார் . இப்படி இருக்கும் நிலையில் மிஸ் தமிழ்நாடு டைட்டில் பட்டத்தை வென்ற தாரிணி என்பவரை,

பல வருடங்களாக காதலித்து வந்தார் நடிகர் காளிதாஸ்.  இப்படி இருக்கும் நிலையில் நேற்று இவர்களுடைய நிச்சயதார்த்தம் பிரம்மாண்டமாக நடைபெற்றது.  தற்போது அந்த புகைப்படங்கள் இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது…

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *