May 4, 2024

திடீ ர் திரு மண ம் செய்துக் கொ ண்ட கவி ன் ..!! பிக் பாஸ் லாஸ் லி யா போட்ட சோ கமா ன பதிவு ..!! இப் போ து வருத் தப்பட் டு என் ன பிரோ ஜ னம் ..!!

சமீப காலமாக தமிழ் சினிமா உலகில் பல தரமான இளம் நடிகர்கள் உருவாகி வருகின்றனர்.  அந்த வகையில் பல பேரை கூறலாம் . அந்த வரிசையில் ஒருவர் தான் நடிகர் கவின்.  விஜய் தொலைக்காட்சியில் ஒளிப் பரப்பான சூப்பர் ஹிட் சீரியலான கனா காணும் காலங்கள் கல்லூரி சாலை என்ற சீரியல் மூலம் அறிமுகமான கவின் தொடர்ந்து பல சீரியல்களில் நடித்து வந்தார்.  இதன் பிறகு பீட்சா, இன்று நேற்று நாளை, சத்ரியன் போன்ற படங்களில்,

சிறு சிறு கதாபாத்திரங்களில் நடித்து வந்த கவின் நட்புனா என்னனு தெரியுமா என்ற படத்தின் மூலம் ஹீரோவாக அறிமுகமானார் . பின்னர் இந்த படத்தை தொடர்ந்து வெளியான லிப்ட் மற்றும் டாடா போன்ற திரைப்படங்கள் கவினுக்கு நல்ல வரவேற்பை பெற்று தந்தது என்று தான் சொல்ல வேண்டும் .  இப்படி இருக்கும் நிலையில்,

33 வயதான நடிகர்  கவினுக்கு நேற்று கோலாகலமாக திருமணம் நடந்து முடிந்தது . மேலும் அவருடைய நீண்ட நாள் காதலியான மோனிகா என்பவரையே கவின் திருமணம் செய்து கொண்டிருக்கிறார் . ஆனால் நடிகர் கவின் பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்ட போது சக போட்டியாளரான லாஸ்லியாவை காதலித்து வந்தது ,

அனைவருக்கும் தெரிந்த ஒன்று தான்.  பின்னர் அந்த நிகழ்ச்சி முடிந்து வெளியே வந்ததும் இருவரும் பிரிந்து விட்டதாக லாஸ்லியாவே கூறியிருந்தார்.  இந்நிலையில் நேற்று கவினுக்கு திருமணமானதை ஒட்டி தன்னுடைய சமூக வலைத்தள பக்கத்தில் புதிய பதிவு ஒன்றை போட்டுள்ளார் நடிகை லாஸ்லியா.  அதில்,

“Can’t help but wonder” ( ஆச்சிரியப்படாமல் இருக்க முடியாது ) என்று சோகமாக இருக்கும் புகைப்படத்தை பகிர்ந்து பதிவு போட்டுள்ளார் நடிகை லாஸ்லியா. இதைப் பார்த்த ரசிகர்கள் இப்போது வருத்தப்பட்டு என்ன பிரயோஜனம் என்று கூறி வருகின்றனர்.இதோ அந்த பதிவு நீங்களும் பாருங்க …

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *