April 27, 2024

பெண் வேடத்தில் நடித்த தமிழ் நடிகர்கள் ..!! இத்தனை பேரா ..?? இதில் உங்களுக்கு யாரை பிடிக்கும் ..??

தமிழ் சினிமாவில் இருக்கும் ஒரு சில நடிகர்கள் பெண் வேடத்திலும் நடித்து அசத்து இருக்கின்றனர்.  அதில் ஒரு சிலருக்கு சூட்டானாலும் , ஒரு சிலருக்கு அது செட் ஆகாமல் போனது . அப்படி பெண் வேடத்தில்  கலக்கிய நடிகர்களின் லிஸ்ட் தற்போது வெளியாகி உள்ளது . அந்த வகையில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் பணக்காரன் படத்தில் இடம் பெற்ற பாடலில் பெண் வேஷம் போட்டு நடித்திருப்பார் .

இவரை தொடர்ந்து கமல்ஹாசன் அவ்வை சண்முகி படத்திலும்,  தசாவதாரம் படத்தில் பெண் வேடத்தில் தத்துரூபமாய் நடித்திருப்பார் . இவரைத் தொடர்ந்து ஆணழகன் படத்தில் ஒரு பெண்ணாகவே மாறி இருப்பார் நடிகர் பிரசாந்த்.  இவரைத் தொடர்ந்து காஞ்சனா படத்தில்,

திருநங்கையாக நடித்து ரசிகர்களை கவர்ந்திருந்தார் நடிகர் சரத்குமார் . இவரைத் தொடர்ந்து அவ்வை சண்முகி படம் போல ரெமோ படத்தில் பெண்ணாக நடித்து ரசிகர்களை வயிறு குலுங்க சிரிக்க வைத்திருந்தார் சிவகார்த்திகேயன்.  இவர்களை தொடர்ந்து கந்தசாமி படத்தில் ,

விக்ரம் , அயன் படத்தில் சூர்யா ,ஆல் இன் ஆல் அழகுராஜா படத்தில் சந்தானம், பாட்டாளி படத்தில் வடிவேலு ,குரு நம்ம ஆளு படத்தில் விவேக் போன்ற பல நடிகர்கள் பெண் கதாபாத்திரத்தில் நடித்திருந்தனர். இதில் உங்களுக்கு யாரை பிடிக்கும்..??

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *