May 1, 2024

கண வர் என் றால் இப்ப டி இருக் க ணும் ..!! மனை வி யை தாங் கு தாங்கு னு தாங் கும் கெள தம் கார் த் திக் ..!! மஞ்சி மா மோக ன் ரொ ம்ப கொடு த்து வச் ச வர் ..!!

தற்போது தமிழ் சினிமாவை கலக்கி வரும் இளம் நடிகர்களில் ஒருவர் தான் நடிகர் கௌதம் கார்த்திக் . நவரச நாயகன் கார்த்திக்கின்  மகனான கௌதம் கார்த்திக்  கடந்த 2013 ஆம் ஆண்டு இயக்குனர் மணிரத்னம் இயக்கத்தில் வெளியான கடல் என்ற படத்தின் மூலம் ஹீரோவாக அறிமுகமானார்.  பின்னர் இந்தப் படத்தை தொடர்ந்து என்னமோ ஏதோ ,வை ராஜா வை, முத்துராமலிங்கம்,

போன்ற படங்களில் நடித்திருந்தாலும் கௌதம் கார்த்திக்கு  நல்ல வரவேற்பை பெற்று தந்தது ரங்கூன் ,இவன் தந்திரன் , தேவராட்டம் போன்ற திரைப்படங்கள் தான் . குறிப்பாக தேவராட்டம் படத்தில் நடிக்கும் போது மலையாள நடிகையான  மஞ்சிமா மோகன் மீது காதல் வயப்பட்டார் நடிகர் கௌதம் கார்த்திக் .

பின்னர் பல வருடங்களாக இருவரும் காதலித்து வந்த நிலையில் கடந்த வருடம் இருவரும் பெற்றோர்கள் சம்மதத்துடன் திருமணம் செய்து கொண்டனர் . திருமணத்துக்கு பிறகு வகெளதம் கார்த்திக் நடிப்பில் வெளியான பத்து தல , ஆகஸ்ட் 16 1947 போன்ற படங்கள் நல்ல வரவேற்பை பெற்றது .

மேலும் திருமணமான போது அவருடைய மனைவி மஞ்சிமா மோகன் மிகவும் குண்டாக இருந்தார் என்று பலராலும் விமர்சிக்கப்பட்டார்.  இப்படி இருக்கும் நிலையில் தற்போது உடல் எடையை குறைப்பதற்காக தீயாக  உடல் பயிற்சி செய்து வருகிறார்  நடிகை மஞ்சிமா மோகன்.

அப்படி அவர் உடல் எடையை குறைப்பதற்காக கௌதம் கார்த்திக்கும்  அவருக்கு உதவி செய்து வருகிறார் . அந்த வீடியோவை தற்போது மஞ்சுமா மோகன் வெளியிட்டு இருந்தார்.  இதை பார்த்த ரசிகர்கள் கணவர் என்றால் இப்படி இருக்க வேண்டும் என்று கூறி வருகின்றனர்…

 

 

View this post on Instagram

 

A post shared by Manjima Mohan (@manjimamohan)

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *