May 2, 2024

என் னது , சூர் யா தா ன் அடுத் த முதல மைச் சரா ..?? இ வர் வந் தா விஜ ய்க்கே டப் கொடு ப்பாரே ..?? வெளி வ ந்த தகவ லா ல் ஏற் பட்ட குழ ப்ப ம் ..!!

தற்போது தமிழ் சினிமா உலகை கலக்கி வரும் டாப் நடிகர்களில் ஒருவராக இருந்து வருகிறார் நடிகர் சூர்யா . சமீப காலமாக சினிமாவில் ஜெயிக்க முடியாமல் தவித்து வந்த சூர்யாவுக்கு சூரரைப்போற்று , ஜெய் பீம் போன்ற திரைப்படங்கள் மிகப்பெரிய வரவேற்பை  பெற்றுத்தந்தது என்று தான் சொல்ல வேண்டும் .  இதை அடுத்து தற்போது இயக்குனர்  சிறுத்தை சிவா இயக்கத்தில் உருவாகி வரும்,

கங்குவா என்ற படத்தில் பிஸியாக  நடித்துக் கொண்டு வருகிறார் நடிகர் சூர்யா.  இதைத் தொடர்ந்து வெற்றிமாறன் , சுதா கொங்கரா போன்ற முன்னணி இயக்குனர்களின் படங்களிலும் நடிக்க இருக்கிறார் நடிகர் சூர்யா .  இப்படி இருக்கும் நிலையில் அண்மையில் தன்னுடைய ,

48 வது பிறந்த நாளை கொண்டாடியிருந்தார்  நடிகர் சூர்யா . அப்படி அவருடைய பிறந்த நாளின் போது ரசிகர்கள் சூர்யாவை அடுத்த முதலமைச்சர் என்று குறிப்பிட்டு இருந்தனர் . ஏற்கனவே நடிகர் விஜய் அரசியலில் களம் இறங்குவதற்காக பல்வேறு வேலைகளை செய்து,

கொண்டிருக்கும் நிலையில் சூர்யா தான் அடுத்த முதலமைச்சர் என்ற போஸ்டர் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.  என்னதான் ரசிகர்கள் இதுபோன்று செய்தாலும் சூர்யாவுக்கு இப்போதைக்கு அரசியலுக்கு வருவதில் ஆர்வம் இல்லை என்றே  சொல்லலாம் .

அது மட்டுமல்லாமல் அகரம் அறக்கட்டளை மூலம் பல மாணவ மாணவிகளை படிக்க வைத்த சூர்யா அரசியலுக்கு வந்தாலும் நன்றாக தான் இருக்கும் என்று கூறப்படுகிறது. தற்போது இந்த தகவல் இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *