April 28, 2024

அடுத் த சூப்ப ர் ஸ்டா ர் நா ன் தா ன் ..!! 25 வருடங் களு க்கு முன் பே பஞ்சாய த் தை ஆரம் பித் து வை த்த நடி க ர் ..!! இப் போது அதை வைர லாக் கும் ரசிக ர் கள் ..!!

தமிழ் சினிமா உலகில் கிட்டத்தட்ட 45 வருடங்களாக தவிர்க்க முடியாத முன்னணி நடிகராக கலக்கி கொண்டு வருபவர் நம்ம சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் அவர்கள் . தன்னுடைய ஸ்டைலான நடிப்பால் இரண்டு தலைமுறை ரசிகர்களையும் கவர்ந்து வைத்திருக்கும் சூப்பர் ஸ்டாருக்கு நிகர் அவர் மட்டுமே . அப்படி இருக்கும்போது சமீப காலமாக அடுத்த சூப்பர் ஸ்டார் யார் என்ற விவாதம் தான் ,

பெரிய அளவில் பேசப்பட்டு வருகிறது.  இதில் விஜய்,  சிவகார்த்திகேயன் போன்ற பல நடிகர்களின் பெயர் அடிக்கடி அடிபட்டு வருகிறது . இன்னும் சொல்லப்போனால் கண்டிப்பாக அடுத்த சூப்பர் ஸ்டார் விஜய் தான் என்று பிரபலங்கள் முதல் ரசிகர்கள் வரை கூறி வருகின்றனர்.

இதனால் ஜெயிலர் படத்தின் இசை வெளியீட்டு விழாவில் உயர உயர பறந்தாலும் காகம் கழுகு ஆக முடியாது என்று மறைமுகமாக விஜய்யை தாக்கிப் பேசி இருந்தார்  சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் அவர்கள் . இப்படி இருக்கும் நிலையில் 20 வருடங்களுக்கு முன்பே நான் தான்,

அடுத்த சூப்பர் ஸ்டார் என்று கூறியிருக்கிறார் ஒரு நடிகர்.  அவர் வேறு யாருமில்லை நடிகர் அஜித் தான் . அந்த வகையில் அமராவதி என்ற படத்தின் மூலம் தன்னுடைய திரை பயணத்தை தொடங்கிய அஜித் குறிப்பிட்ட காலகட்டத்திலேயே பெரிய அளவில் பேசப்பட்டார்.  அப்படி,

இவரின் நடிப்பில் வெளியான உல்லாசம் படம் வெளிவந்த போது நான்தான் அடுத்த சூப்பர் ஸ்டார் என்று கூறியிருந்தார் அஜித் . ஆனால் அன்று அப்படி சொல்லியவர் பிற்காலத்தில் த னக் கு எந்த பட்டமும் வேண்டாம் என்று ஒதுங்கி வாழ்ந்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது…

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *