May 2, 2024

2 வயசு தான் ஆகுது ..!! இப்பவே கார் ஓட்டும் காஜல் அகர்வாலின் மகன் ..!! வெளியான புகைப்படங்களை பார்த்து வியந்து போன ரசிகர்கள் ..!!

தென்னிந்திய சினிமா உலகில் ஒரு முக்கியமான நடிகையாக இருந்து வருபவர் நடிகை காஜல் அகர்வால் . ஹிந்தி படத்தின் மூலம் திரை பயணத்தை தொடங்கிய காஜல் அகர்வால் கடந்த 2008 ஆம் ஆண்டு பரத் நடிப்பில் வெளியான பழனி என்ற படத்தின் மூலம் தமிழ் சினிமாவிற்கு கதாநாயகியாக அறிமுகமானார் . பின்னர் இந்த படத்தை தொடர்ந்து சரோஜா, பொம்மலாட்டம், மோதி விளையாடு ,

நான் மகான் அல்ல, மாற்றான் ,துப்பாக்கி ,ஆல் இன் ஆல் அழகுராஜா, ஜில்லா, மாரி ,பாயும் புலி , கவலை வேண்டாம் போன்ற பல திரைப்படங்களில் நடித்திருந்தார் . மேலும் நடிகை காஜல் அகர்வால் தமிழ் மொழி மட்டுமல்லாமல் தெலுங்கு மற்றும் ஹிந்தி மொழி ,

படங்களிலும் தொடர்ந்து நடித்துக்கொண்டு வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது . தற்போது இவர் இயக்குனர் ஷங்கர் இயக்கத்தில் கமல்ஹாசன் நடிப்பில் உருவாகி வரும் இந்தியன் 2 என்ற படத்தில் பிஸியாக நடித்துக்கொண்டு வருகிறார் . இப்படி நடித்துக்கொண்டிருக்கும் போதே ,

கடந்த 2020 ஆம் ஆண்டு கௌதம்  என்பவரை திருமணம் செய்து கொண்டார் காஜல் அகர்வால் . திருமணமான இவர்களுக்கு கடந்த 2022 ஆம் ஆண்டு அழகிய ஆண் குழந்தை பிறந்தது . இப்படி இருக்கும் நிலையில் இரண்டு வயதாக போகும் காஜல் அகர்வாலின் மகன்,

இப்போதே கார் ஓட்டுகிறாராம் . அந்த க்யூட் புகைப்படங்களை தன்னுடைய சமூக வலைத்தளப்பக்கத்தில் பகிர்ந்துள்ளார் காஜல் அகர்வால்.  இதைப் பார்த்த ரசிகர்கள் காஜல் அகர்வாலின் இது.? இப்பவே இப்படி கார் ஓட்டுகிறாரே என்று கூறி வருகின்றனர்…

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *