April 29, 2024

ரஜினியை வளைத்து போட்டது போல ..!! இந்த நடிகரையும் வளைத்து போட்ட கலாநிதி மாறன்..!! அடுத்த ஆயிரம் கோடி வசூலுக்கு இப்படியொரு திட்டமா ..??

கலாநிதி மாறன் ஒரு பிரபலமான தமிழ் திரைப்பட தயாரிப்பாளர் ஆவார் . இதுவரை பல சூப்பர் ஹிட் படங்களை தயாரித்து இருக்கும் கலாநிதி மாறனின் தயாரிப்பில் சமீபத்தில்  வெளியான திரைப்படம் தான் ஜெயிலர். சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில்வெளியான இந்த  திரைப்படம் மிகப்பெரிய வெற்றி படமாக அமைந்தது . அது மட்டுமல்லாமல் இந்த படம் 600 கோடிக்கு மேல் வசூல் செய்து சாதனை படைத்தது .

இதனால் பல மடங்கு லாபத்தை பார்த்தார் கலாநிதி மாறன்.  இதை அடுத்து ஜெயிலர் படத்தின் மூலம் கிடைத்த லாபத்தை அடுத்தடுத்த படங்களில் முதலீடு செய்ய உள்ளார கலாநிதி மாறன்.  அந்த வகையில் மீண்டும் ரஜினியை வைத்து ஒரு படத்தை தயாரிக்க உள்ளாராம் .

அந்த படத்தை இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்க உள்ளார் . இப்படி இருக்கும் நிலையில் ரஜினியை வளைத்துப் போட்டது போல இந்த நடிகரையும் வளைத்து போட்டு விட்டாராம் கலாநிதி மாறன் . அவர் வேறு யாருமில்லை நடிகர் அஜித் தான் . பொதுவாகவே கார்ப்பரேட் கம்பெனி,

தயாரிக்கும் படங்களுக்கு அஜித் எப்போதும் கால்ஷீட் கொடுக்க மாட்டாராம் . அந்த அளவிற்கு பல வருடமாக இந்தக் கொள்கையை கடைப்பிடித்து வருகிறார் அஜித் .  ஆனால் தற்போது சன் பிக்சர்ஸ் நிறுவனத்திற்கு கால் சீட் கொடுத்திருக்கிறாராம் நடிகர் அஜித் .

மேலும் கலாநிதி மாறனும் நைசாக பேசி பெரிய தொகையை சம்பளமாக தருவதாக சொல்லி வளைத்து போட்டு விட்டாராம் . இதனால் இன்னும் சில வருடங்களில் எப்படியாவது கலாநிதி மாறன் தயாரிக்கும் படம் ஆயிரம் கோடி வசூலை தொட்டு விடும் என்று கூறப்படுகிறது…

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *