April 29, 2024

குரு வையே மிஞ் சிய சி ஷ்யன்..!! சம்பள விஷய த்தில் ஷங்க ரை யே ஓரங்க ட்டி ய அட் லீ ..!! அ டேங்கப் பா ,இத்த னை கோ டி சம் பள மா ..?? வளர் ச் சினா இப் படி இருக்க ணு ம் ..!!

தமிழ் சினிமா உலகில் பிரம்மாண்ட இயக்குனர் என்ற அந்தஸ்துடன் இருந்து வருபவர் இயக்குனர் ஷங்கர் . இதுவரை பல சூப்பர் ஹிட் படங்களை இயக்கியிருக்கும் இயக்குனர் ஷங்கர் தன்னுடன் பணிபுரிந்த பல உதவி இயக்குனர்களை வளர்த்து விட்டிருக்கிறார் . அப்படி அவர் வளர்த்து விட்டவர்களில் முக்கியமானவர் தான் இயக்குனர் அட்லீ . ஆரம்பத்தில் இயக்குனர் ஷங்கர் இயக்கிய,

எந்திரன் மற்றும்  நண்பன் போன்ற திரைப்படங்களில் உதவி இயக்குனராக பணியாற்றி வந்த அட்லீ கடந்த 2013 ஆம் ஆண்டு வெளியான ராஜா ராணி என்ற படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமானார் . இப்படி வெளியான முதல் திரைப்படமே இவருக்கு நல்ல வரவேற்பை பெற்று தந்தது .

பின்னர் இந்த படத்தை தொடர்ந்து தெறி, மெர்சல் ,பிகில் என்று தொடர்ச்சியாக நடிகர் விஜய்க்கு மூன்று சூப்பர் ஹிட் படத்தை கொடுத்திருந்தார் அட்லீ . இதை அடுத்து தற்போது ஹிந்தி நடிகரான ஷாருக்கானை வைத்து ஜவான் என்ற படத்தை இயக்கி முடித்துள்ளார் இயக்குனர் அட்லீ .

இப்படி இருக்கும் நிலையில் சம்பள விஷயத்தில் குருவையே மிஞ்சியுள்ளார் இயக்குனர் அட்லீ .அந்த வகையில் ஜவான் படத்திற்காக 30 கோடி சம்பளம் வாங்கிய இயக்குனர் அட்லீ  அடுத்ததாக  இயக்கவுள்ள படத்திற்காக தன்னுடைய சம்பளத்தை 20 கோடி ஏற்றி ,

50 கோடியாக கேட்கிறாராம்.  அதைக் கொடுப்பதற்கும் ஒரு தயாரிப்பு நிறுவனம் தயாராக இருக்கிறதாம் . ஆனால் இயக்குனர் அட்லீயின்  குருவான இயக்குனர் ஷங்கரே ஒரு படத்திற்கு 40 கோடி தான் சம்பளம் வாங்கி வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது…

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *