April 29, 2024

ஒருவேளை இவரும் அரசியலுக்கு வருவரோ ..?? ஆட்டோ டிரைவர்களுடன் விஜயதசமியை கொண்டாடிய அண்ணாச்சி ..!! வெளியான லேட்டஸ்ட் புகைப்படங்கள் ..!!

தமிழ்நாட்டை கலக்கி வரும் பிரபல தொழிலதிபர்களில் ஒருவர் தான் சரவணா ஸ்டோர்ஸ் உரிமையாளரான சரவணன் அருள்.  ஆரம்பத்தில் தன்னுடைய கடை விளம்பரத்தில் நடித்து தமிழ் ரசிகர்களை கவர்ந்தார் சரவணன் அருள் . பின்னர் கடந்த வருடம் வெளியான தி லெஜெண்ட் என்ற படத்தின் மூலம் ஹீரோவாக அறிமுகமானார் சரவணன் அருள் . இந்த படத்தை அவரே தயாரித்தும் இருந்தார் .

இப்படி வெளியான திரைப்படம் மோசமான வரவேற்பையே  பெற்றது . இன்னும் சொல்லப்போனால் ரசிகர்கள் இந்த படத்தை கழுவி ஊற்றினார்கள் . அப்படி இருந்தும் கூட தன்னுடைய அடுத்த படத்தில் பிஸியாக இருந்து வருகிறார் லெஜன்ட் சரவணன் .

அதுமட்டுமில்லாமல் தன்னுடைய கெட்டப்பையும் மாற்றி இருக்கிறார் லெஜன்ட் சரவணன். மேலும் சமூக வலைத்தளங்களில் எப்போதும் ஆக்டிவாக இருந்து வரும் சலெஜன்ட் சரவணன் விஜயதசமியை ஆட்டோ டிரைவர்களுடன் கொண்டாடியிருக்கிறார் .

அந்தப் புகைப்படங்கள் தற்போது இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது . இதையெல்லாம் பார்த்த இவரும் சீக்கரம் அரசியலுக்கு வந்துவிடுவார் போல என்று கூறிவருகின்றனர் . இதோ அந்த புகைப்படங்களை நீங்களும் பாருங்க…

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *