April 29, 2024

வேட் டையன் ரா ஜன் வ ரார் வரா ர் ..!! ரஜி னிக் கே டப் கொ டுக்கும் ராக வா லார ன்ஸ் ..!! புகைப் படத் தை வெ ளியிட்ட சந்தி ரமு கி 2 பட க்குழு ..!! பார் த்தும் மிரண்டு போ ன ரசிக ர் கள் ..!!

தமிழ் சினிமா உலகில் கடந்த 2005 ஆம் ஆண்டு இயக்குனர் பி வாசு இயக்கத்தில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் வெளியான சூப்பர் ஹிட் திரைப்படம் தான் சந்திரமுகி . இந்த படம் வெளியாகி கிட்டத்தட்ட 18 ஆண்டுகள் ஆன நிலையில் இந்த படத்தின் இரண்டாம் பாகத்தை நடிகர் ராகவா லாரன்ஸை வைத்து தொடங்கினார் இயக்குனர் பி வாசு . அந்த வகையில் இந்த படத்தில் ராகவா லாரன்ஸ் ,

கங்கனா ரனாவத் ,ராதிகா ,வடிவேலு, லட்சுமிமேனன் , சிருஷ்டி டாங்கே , மகிமா நம்பியார் என்று பல நடிகர் , நடிகைகள் நடித்துள்ளனர் . லைக்கா நிறுவனம் தயாரிக்கும் இந்த படத்திற்கு ஆஸ்கர் வாங்கிய எம் எம் கீரவாணி இசையமைத்துள்ளார் . அது மட்டுமல்லாமல் சமீபத்தில்,

இந்த படத்தை பார்த்த இசையமைப்பாளர் எம் எம் கீரவாணி ஒவ்வொரு காட்சிகளும் என்னை மிரள வைத்தது என்று பிரமிப்பாக கூறியிருந்தார்.  இப்படி இருக்கும் நிலையில் இந்த திரைப்படம் வருகின்ற விநாயகர் சதுர்த்தியை  முன்னிட்டு வெளியாக உள்ளது என்று,

ஏற்கனவே சந்திரமுகி 2 படக்குழுவினர் அறிவித்திருந்தனர்.  ஆனால் இந்த படத்தில் வேட்டையன் ராஜனாக நடிக்கும் ராகவா லாரன்ஸின் புகைப்படத்தை வெளியிடாமல் இருந்தனர் .  இந்நிலையில் முதன் முறையாக வேட்டையன் ராஜனின் புகைப்படத்தை,

வெளியிட்டுள்ளனர் சந்திரமுகி 2 படக் குழுவினர் . அந்தப் புகைப்படம் தற்போது இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது.  இதை பார்த்த ரசிகர்கள் வேட்டையன்  ராஜனாக நடித்திருந்த ரஜினிக்கே  ராகவா லாரன்ஸ் டப் கொடுப்பார் போல என்று கூறி வருகின்றனர்…

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *