April 29, 2024

47 வருட இசைப்பயணம் ..!! படமாக உருவாகும் இளையராஜாவின் வாழ்க்கை ..!! இதில் இசையானியாக நடிப்பது இந்த நடிகரா ..?? அப்ப தேசிய விருது உறுதி ..!!

தமிழ் சினிமாவைப் பொறுத்தவரை இன்னும் நூறு வருடங்கள் ஆனாலும் கூட இளையராஜாவின் இசை தனித்து நிற்கும் என்பதில் எந்த ஒரு மாற்றுக் கருத்துமே இல்லை . அந்த வகையில் முறையாக இசையை கற்றுக் கொண்ட இளையராஜா கடந்த 1976 ஆம் ஆண்டு வெளியான அன்னக்கிளி என்ற படத்தின் மூலம் தன்னுடைய இசை பயணத்தை தொடங்கினார்.  இதன் பிறகு இவர் இசையமைத்த திரைப்படங்கள்,

எல்லாம் சூப்பர் ஹிட் அடித்தது . இன்னும் சொல்லப் போனால் இவருடைய இசைக்காகவே ஓடிய படங்களும் உண்டு.  அதுவும் முன்னணி நடிகர்கள் முதல் அறிமுக நடிகர்கள் வரை எல்லா நடிகர்களின் படத்திற்கும் பாரபட்சம் பார்க்காமல் சூப்பர் ஹிட் பாடல்களை கொடுத்திருந்தார்,

இசைஞானி இளையராஜா  அவர்கள் .   அப்படி இளையராஜா இதுவரை ஆயிரம் படங்களுக்கு மேல் இசை அமைத்து சாதனை படைத்திருக்கிறார்.  குறிப்பாக 80 வயதிலும் பல திரைப்படங்களுக்கு இசையமைத்து வருகிறார் இளையராஜா.  இந்நிலையில் இளையராஜாவின் 47 வருட,

இசைப் பயணத்தை படமாக உருவாக்க உள்ளார்களாம்.  அப்படி உருவாகும் இளையராஜாவின் வாழ்க்கை வரலாற்றில் இளையராஜாவாக  தனுஷ் நடிக்கப் போகிறாராம் . இந்தப் படத்தை பிரபல ஹிந்தி பட இயக்குனர் ஒருவர் இயக்க உள்ளாராம் . ஏற்கனவே இளையராஜாவின் தீவிர ரசிகர்,

தனுஷ் , அப்படி இருக்கும்போது அவருடைய திரை வாழ்க்கையில் தனுஷ் நடித்தால்  கண்டிப்பாக இந்த திரைப்படம் தேசிய விருது வாங்கும் என்று கூறப்படுகிறது…

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *