April 27, 2024

ஆக்சன் கிங்கின் மகளை திருமணம் செய்யப்போகும் காமெடி கிங்கின் மகன் ..!! நாள் குறித்து வைத்த அர்ஜுன் ..!! எப்போது தெரியுமா ..??

தமிழ் சினிமா ரசிகர்களால் ஆக்சன் கிங் என்று கொண்டாடப்படுபவர் தான் நடிகர் அர்ஜூன் . சமீபத்தில் விஜய் நடிப்பில் வெளியான லியோ படத்திலும் நடித்து அசத்தியிருந்தார் நடிகர் அர்ஜுன் . மேலும் இவருக்கு திருமணமாகி இரண்டு மகள்கள் உள்ளனர். அதில் மூத்த மகளான ஐஸ்வர்யா விஷால் நடிப்பில் வெளியான பட்டத்து யானை என்ற படத்தின் மூலம் கதாநாயகியாக அறிமுகமானார் .

ஆனால் இந்த படத்திற்கு பிறகு இவருக்கு பெரிய அளவில் பட வாய்ப்பு எதுவும் அமையவில்லை.  இப்படி இருக்கும் நிலையில் இவர் விரைவில் காமெடி நடிகரும், குணச்சித்திர நடிகருமான  தம்பி ராமையாவின் மகனான உமாபதியை திருமணம் செய்யப் போகிறாராம்.மேலும் ,

உமா பதியும் தமிழில் வெளியான ஆதங்கப்பட்டது மகாஜனங்களே, மணியார் குடும்பம், திருமணம் ,தண்ணி வண்டி போன்ற படங்களில் நடித்திருக்கிறார் . கடந்த சில வருடங்களாக இவரும் ஐஸ்வர்யாவும் காதலித்து வந்துள்ளனர் . இதனால் தம்பிராமையாவும் ,

அர்ஜுனும் இருவருக்கும் திருமணம் செய்ய முடிவெடுத்துள்ளார்களாம் . அந்த வகையில் இவர்களுடைய திருமணம் வருகின்ற தை மாதம் நடக்க உள்ளதாம்  . இதையடுத்து தற்போது இவர்களுடைய நிச்சயதார்த்தம் சென்னையில் அர்ஜுன் கட்டியுள்ள ஆஞ்சநேயர் கோவிலில்,

இந்த மாதம் நடக்க உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது . இந்த நிகழ்வில் இரு வீட்டாரின் உறவினர்கள் மட்டுமே கலந்து கொள்ள உள்ளதாகவும் கூறப்படுகிறது…

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *